மீண்டும் துளிர்த்த நயன்தாரா – பிரபுதேவா உறவு… – விரக்தியில் விக்னேஷ் சிவன்…

nayanthara and prabhudeva

சிம்பு… பிரபுதேவா… விக்னேஷ் சிவன் என நீண்டுகொண்டேபோகும்  நயன்தாராவின் காதல்கதை இப்போதைக்கு கல்யாணத்தில் முடியாது போலிருக்கிறது.

பிரபுதேவாவுடன் பிணக்கு ஏற்பட்டதும் உதயநிதியுடன் சில மாதங்கள் நெருக்கமாக இருந்தார் நயன்தாரா.

இந்த விஷயம் உதயநிதியின் குடும்பத்தில் புயலைக் கிளப்ப, கிளம்பி வந்த ஒரு கூட்டம் நயன்தாராவுக்கு கொடுத்த அழுத்தம் அல்லது விடுத்த மிரட்டல் காரணமாக கடைசியில் விக்னேஷ் சிவனிடம் சரணடைந்தார்.

தன் புதிய காதலருக்காக உருகிய நயன்தாரா அவருக்கு சொகுசு கார், ஆடம்பரமான ப்ளாட் என அள்ளிக் கொடுத்தார்.

காதலருடன் வாடிகனுக்கு அழைத்துச் சென்று போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார்.

இதை எல்லாம் வைத்து, காதல் மாரத்தானை நயன்தாரா இதோடு முடித்துக்கொள்வார்.

விரைவில் விக்னேஷ்சிவனுக்கு கழுத்தை நீட்டி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில்தான் சமீபத்தில் செம்ம ட்விஸ்ட்.

மும்பையில் செட்டிலாகிவிட்ட பிரபுதேவா சென்னைக்கு வந்தால் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில்தான் தங்குகிறார்.

அதே ஹோட்டலில் நயன்தாராவுக்கும் பர்மனென்ட் ரூம் உண்டு.

சென்னையில் இரண்டு சொகுசு  ப்ளாட்களை சொந்தமாக வைத்திருக்கிறார் நயன்தாரா.

அதில் ஒரு ப்ளாட்டில்தான் நயன்தாராவும் காதலர் விக்னேஷ் சிவனும் ஒன்றாக குடியிருக்கிறார்கள்.

ஆனாலும் அடிக்கடி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தன்னுடைய அபிமான நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா.

ஒரு நாளைக்கு  ஒன்றரை லட்சத்துக்கும் மேல் ரூம் வாடகை கொடுத்து நயன்தாரா அங்கு தங்குவது என்?

தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களை வீட்டுக்கு அழைப்பதில் அவருக்கு விருப்பமில்லையாம். எனவே கதை கேட்பதற்காகவே அந்த ஹோட்டலில் தங்குவதாக சொல்கிறாராம்.

அங்குதான் பிரபுதேவாவை சந்தித்து பேசியிருக்கிறார் நயன்தாரா.

இருவருக்கும் இடையிலான  தனிமை சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது.

பிரபுதேவாவை  பல வருஷங்கள் கழித்து சந்தித்ததால் எமோஷனலாகி நயன்தாரா கதறி அழுதார் என்றும் தகவல்.

பழைய காதலர் உடனான சந்திப்பின்போது தற்போதைய காதலர் விக்னேஷ் சிவனை சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டாராம் நயன்தாரா.

தனக்கு தெரியாமல் பிரபுதேவாவை நயன்தாரா சந்தித்ததை விக்னேஷ் சிவன் ரசிக்கவில்லை.

அதுமட்டுமல்ல, பிரபுதேவா உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு மீண்டும் இருவருக்கும் இடையில் ‘நட்பு’ ஏற்பட்டிருக்கிறதாம்.

பிரபுதேவாவுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேச ஆரம்பித்திருக்கிறாராம்.

நயன்தாராவின் இந்த நடவடிக்கை விக்னேஷ்சிவனை விரக்தியடைய வைத்திருக்கிறது என்பதே இப்போதைய நிலவரம்.