முத்து நகரம் படத்தைப் பார்த்து காவல் நிலையத்தில் துப்பாக்கியைத் திருடினார்களா?

IMG_8943

கே.திருப்பதி இயக்கத்தில் உருவான “முத்து நகரம்” படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

உல்லாசப்பறவைகளாய் சுற்றி திரிந்த நண்பர்கள் ஐந்து பேரை பொய்வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது போலீஸ். தண்டனை முடிந்து வெளியே வந்த ஐவரும் அதே போலீஸ் நிலையத்திற்குப் போகின்றனர். அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறனர். பொய்வழக்குப் போட்ட இன்ஸ்பெக்டர் மீது விசாரனை நடக்கிறது – இதுதான் முத்து நகரம் படத்தின் கதை.

முத்துநகரம் படம் வெளியான அதே நாளன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி என்ற ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று களவு போயிருக்கிறது.

‘அந்த துப்பாக்கியை எடுத்து யாராவது தவறான செயல்களில் ஈடுபட்டால் தேவையில்லாமல் அந்த காவல் நிலைய காவலர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்வார்கள்‘ என்றார் இயக்குநர் கே.திருப்பதி.

ஸாரு ரொம்பத்தான் பீல் பண்றாரு..