நடிகையை மணக்கும் இளம் இசையமைப்பாளர்

music-director-dharan-dheekshita-wedkock1

பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என சுமார் 25 படங்களுக்கு இசையமைத்தவர் தரண்.

இவர் கேரளநாட்டிளம் பெண்களுடனே, நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்த தீக்‌ஷிதாவை திருமணம் செய்கிறார்.

தீக்‌ஷிதா நடிகை மட்டுமல்ல, மாடலாகவும் மற்றும் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருபவர்.

தரண் – தீக்‌ஷிதா திருமணம் வருகிற 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

திருமணத்தை தொடர்ந்து திருமண வரவேற்பு மறுநாள் 16-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது.

திருமணத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த தரண், ‘‘நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். சமீபத்தில்தான் ‘பிஸ்தா’ படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன்.” என்றார்.

நடிகை தீக்‌ஷிதா பேசும்போது, ‘‘2012-ல் இருந்து நான் ஒரு மாடலாகவும் நடிகையாகவும் இருந்து வருகிறேன். கேரளநாட்டிளம் பெண்களுடனே, நகர்வலம், ஆகம் என ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது மாடலிங் மற்றும் விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.’’ என்றார்.