‘மிஸ்டர் சந்திரமௌலி’ படப்பிடிப்பு முடிவடைந்தது…!

mr-chandramouli

ஜி.தனஞ்செயன் தயாரிப்பில், திரு இயக்கத்தில் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ’மிஸ்டர் சந்திரமௌலி’.

ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ‘மைம்’ கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

’மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புக்காக சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு சென்றனர்.

அங்கு நடந்து வந்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’யின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதை தெரிவித்துள்ளார் ஜி.தனஞ்செயன்.

“சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, படக்குழுவின் சிறப்பான ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. ஒட்டுமொத்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவும் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக உழைத்தனர்.

வெளிப்புற படப்பிடிப்பை நிறுத்த சொல்லி தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு பிறப்பித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று பரபரப்புடன் வேலை பார்த்தனர்.

திட்டமிட்ட நேரத்தில் படப்பிடிப்பை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் மல்ட்டி ஸ்டாரர் படங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது எளிதான காரியம் கிடையாது.

கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ், வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் என அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.

பிஸியான இடங்கள், பிஸியான நகரங்கள், நாடுகள் ஆகியவற்றில் நான்கு மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க நிறைய முயற்சிகள் தேவைப்பட்டன. கூடுதல் அழுத்தமும் எங்களுக்கு இருந்தது.” என்கிறார் ஜி.தனஞ்செயன்.

‘பாஃப்டா’ நிறுவனம் தயாரிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார்.