மீசைய முறுக்கு – விமர்சனம்

img_6692

 

கதை
முயற்சி திருவினையாக்கும் என்ற ஒற்றை வரிதான் ‘மீசைய முறுக்கு’ படத்தின் கதை.

பள்ளியில் படிக்கும்போதே பரிச்சயமான ஆதியும் (ஆதி) நிலாவும் (புதுமுகம் ஆத்மிகா) கல்லூரியில் படிக்கும்போது காதல் வயப்படுகிறார்கள்.

படிப்பை முடித்து விட்டு, தனது லட்சியமான இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று கோயம்புத்துரிலிருந்து சென்னைக்கு வருகிறார் ஆதி.

திறமை இருந்தும் அவரால் வெற்றிபெறமுடியாமல்போக, அப்பாவிடம் சொன்னபடி கோயம்பத்தூருக்கே திரும்பி வருகிறார்.

வாழ்க்கையில் ஜெயிக்காத ஆதி, தன் காதலி நிலாவையும் இழக்கிறார்.

இதற்கிடையில், எஃப்.எம்.மில் ஆதி பாடிய பாடல் யூடியூபில் வைரலாகிறது.

அந்த பாடலை உலகமே கொண்டாடுகிறது.

அதன் பிறகு ஆதியின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதுதான் ‘மீசைய முறுக்கு’வின் மிச்ச கதை!

கமெண்ட்

‘மீசைய முறுக்கு’ – இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் சொந்தக்கதையாம்.

அதில் கொஞ்சம் ‘மானே.. தேனே…’ போட்டு அவரே ஹீரோவாகவும் நடித்து, இசையமைத்து இயக்கி இருக்கிறார்.

‘வெற்றி பெற்றால் மட்டுமல்ல, தோல்வியடைந்தாலும் மீசைய முறுக்கி நிற்க வேண்டும்’ என்று படம் சொல்லும் கருத்து  கவனம்  ஈர்க்கிறது.

இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் ஆதிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

நடிப்பில் ஆதி இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

tamilscreen.com Rating

review-rating-2-average