மரகத நாணயம் – விமர்சனம்

maragatha-naanayam-stills-012

கதை –

நண்பன் டேனியலின் சிபாரிசில் ‘முனீஸ்காந்த்’ ராமதாஸிடம் வேலைக்குச் சேர்கிறார் ஆதி.

ராமதாஸ் தரும் சின்ன சின்ன கடத்தல் வேலைகளில் ஆதிக்கு திருப்தியில்லை.

பெரிய அளவில் ஏதாவது செய்தால்தான் தனக்கிருக்கும் 40 லட்சம் கடனை அடைக்க முடியும் என்று நினைக்கிறார்.

அதற்கு ராமதாஸ் உடன்படாத சூழலில், விலை மதிக்க முடியாத மரகத நாணயத்தை எடுத்துக் கொடுத்தால் 10 கோடி ரூபாய் பணம் தருவதாக மைம் கோபி தரும் வேலையை ஏற்றுக்கொள்கிறார் ஆதி.

தன் எதிரிகளை போரில் வெல்வதற்காக இரும்பொறை அரசன் வரம் பெற்று வாங்கியது மரகத நாணயம்.

அதை எடுக்க முயன்ற பல பேரின் உயிரை ‘இரும்பொறை அரசனி’ன் ஆவி காவு வாங்கியிருக்கும் முன்கதையும் தெரிய வருகிறது.

டேனியல் மற்றும் ஆவிகள் உடன் அந்த மரகத நாணயத்தை கைப்பற்ற கிளம்புகிறார் ஆதி.

‘இரும்பொறை அரசனி’ன் ஆவியை மீறி மரகத நாணயத்தை ஆதி கைப்பற்றினாரா இல்லையா? என்பதே ‘மரகத நாணயம்’.

கருத்து –

லாஜிக்கைப் பற்றி யோசிக்காமல், ஃபேன்டஸி படம் இது என்ற மனக்கண்ணாடி அணிந்து பார்த்தால், இரண்டரை மணி நேரம் ஜாலியாக ரசிக்க தகுதியான எண்டெர்டெயின்மெண்ட் பேக்கேஜ்.

tamilscreen.com Rating

review-rating-3-good