விமல் – இயக்குநர் மோதல்… – மன்னர் வகையறா பஞ்சாயத்து….

mannar-vagaiyara-audio-launch-stills-037

A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளது.

பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மன்னர் வகையறா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் விக்ரமன், “திடீரென ஏற்பாடு செய்த இந்த விழாவுக்கு வந்ததற்கு விமல் நன்றி சொன்னார். ஆனால் நான் ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை இயக்கியபோது அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்க விமலை அணுகினேன்.. அதற்கு முன் அவருடன் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் நான் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கமாட்டேன்.

இயக்குநர் பூபதி பாண்டியன் கலாய்ப்பதில் வல்லவர்.. அவர்தான் என் படங்களை முதன்முதலில் கலாய்த்தவர். தேவதையை கண்டேன் படத்தில் சூர்ய வம்சம் படத்தை கலாய்த்தவர், இதில் எந்தப்படத்தை கலாய்த்திருக்கிறாரோ தெரியவில்லை.

இயக்குனர் பேரரசு “இந்த விழாவுக்கு வந்தது நடிகர் விமலுக்காக அல்ல.. தயாரிப்பாளர் விமலுக்காகத்தான். பாக்யராஜூக்கு பிறகு சிறந்த திரைக்கதை எழுதுபவர் என்றால் அது பூபதி பாண்டியன்தான். விமலின் இழப்புகளுக்கு ஈடாக இந்தப்படம் லாபம் சம்பாதித்து கொடுக்கும் என்பது உறுதி”. என்றார்.

ரோபோ சங்கர் ‘நிச்சயம் ஹிட்டாகும் என்று சில படங்களில் நடிக்கும்போதே தெரிந்துவிடும். அது இந்தப்படத்திலும் தெரிந்தது. மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப்போல இந்த ‘மன்னர் வகையறா’வும் காமெடியில் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வடிவேலுக்கு எப்படி ‘வின்னர்’ அமைந்ததோ அப்படி எனக்கு இந்தப்படம் இருக்கும்”.

நடிகை ஆனந்தி, “இந்தப்படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய ட்ரை பண்ணியிருக்கேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன். பூபதி பாண்டியன் சாரிடம், நான் உங்ககிட்ட கொஞ்சநாள் உதவி இயக்குனரா வேலை பார்க்கிறேன்” என வாய்ப்பு கேட்டேன். அந்த அளவுக்கு அவரின் காமெடி டைமிங் சென்ஸ் பார்த்து பிரமித்துப்போனேன்”.

இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய் “துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து, இந்தப்படத்தில் வேறு ஜானரில் இசையமைத்துள்ளேன்.” பூபதி பாண்டியன் எழுதிய ‘உங்க அண்ணனை பத்தியும் கவலை இல்லை’ பாடல் இளைஞர்களிடம் இடம் பிடிக்கும் என்பது உறுதி.

இயக்குனர் பூபதி பாண்டியன், “எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார். அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது.. என் டைரக்சனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம். ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.