350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உதயநிதியின் ‘மனிதன்’ Comments Off on 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உதயநிதியின் ‘மனிதன்’

ரஜினி நடித்த மனிதன் டைட்டிலை தன் படத்துக்கு சூட்டியிருக்கிறார் உதயநிதி.

மனிதன் என்ற டைட்டில் உதயநிதி படத்துக்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத்தரும் என்றாலும், ரசிக எதிர்பார்ப்பை எகிற வைக்கவும் செய்யும்.

அந்தளவுக்கு படத்தில் விஷயம் இருந்தால்தான் வெற்றி வசப்படும்.

“இதை நான் உணர்ந்துதான் இந்த டைட்டிலை வைத்தேன். வெறும் பரபரப்புக்காக மனிதன் என்ற டைட்டிலை வைக்கவில்லை. கதைக்கு மிக பெருத்தமாக இருந்தது. படம் பார்க்கும்போது
இந்த டைட்டில் எந்தளவுக்கு கதைக்கு பொருத்தமாக உள்ளது என்பது புரியும்.”
என்கிறார் உதயநிதி.

நீதிமன்ற பின்னணியில் எடுக்கப்பட்டு ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக்தான் மனிதன் படம்.

‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குநர் அஹமது இயக்கியிருக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

மனிதன் படத்தின் டிரைலர், பாடல்கன் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளநிலையில் வரும் வெள்ளிக்கிழமை படத்தை பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி.

செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படத்தை வெளியிடாத திரையரங்குகளில் எல்லாம்  மனிதன் படம் வெளியாக உள்ளது.

கடந்த வாரம் வெளியான ‘வெற்றிவேல்’ படமும் எதிர்பார்த்தது போலவே ஓடவில்லை. எனவே வெற்றிவேல் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளையும் ‘மனிதன்’ படம் கைப்பற்றியிருக்கிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் ‘மனிதன்’ படம் வெளியாக இருக்கிறது.

உதயநிதி நடித்த படங்களில் ஆபாசம், வன்முறை இருக்காது. ‘மனிதன்’ படத்திற்கு யு சான்றிதழ் வேறு கிடைத்திருக்கிறது.

எனவே விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல சரியான சாய்ஸாக மனிதன் படம் இருக்கும் நம்பலாம்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
ரித்திகா சிங்கிற்கு கிடைத்த தேசிய விருது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை- வசுந்தரா காஷ்யப்

Close