மதுரவீரன் விளம்பரத்தில் காணாமல்போன விஜயகாந்தின் மகன்….!

img-1959

 

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் சகாப்தம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

ஒருநாள் கூட ஓடாத அந்தப்படத்தோடு அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மதுரவீரன் என்ற படத்தில் சண்முகபாண்டியன் மீண்டும் ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் பி.ஜி. முத்தையா.

மதுரவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது.

img-1960

சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

கொள்ளை அடிச்சவன் கூட்டுல,

நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல.

எதையும் நாம பாக்காம

எதுத்து கேள்வி கேக்காம,

அடங்கி ஒடுங்கி கிடப்பதால

ஆளுக்காளு நாட்டாம.“

– போன்ற பல புரட்சிகரமான வரிகளோடு “என்ன நடக்குது நாட்டுல” பாடல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த பாடல் வெளியீட்டின் போஸ்டரில் படத்தின் நாயகனான சண்முகபாண்டியனைக் காணோம். சமுத்திரக்கனியின் படம் மட்டுமே இருந்தது.

அது சரி.. சகாப்தம் ஹீரோ நடிச்ச படம்னு தெரிஞ்சா மதுரவீரன் படத்தை மக்கள் சீண்ட மாட்டாங்கன்னு பயந்துட்டாங்க போலருக்கு…