கும்கி – 2 படத்திலிருந்து டாக்டர் ராஜசேகர் மகள் அதிரடி நீக்கம் ஏன்?

prabhu-solomon

தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா நட்சத்திர தம்பதியின் மகளான ஷிவானியின் போட்டோக்கள், கடந்த சில மாதங்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் வாய்ப்பு தேடி வலம் வந்தது.

பெரிதாக நன்மை ஏதும் விளையாத நிலையில், ஷிவானிக்காக வாய்ப்பு தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பிரபு சாலமன் இயக்க உள்ள கும்கி – 2 படத்தில் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் என்ற செய்தி டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஷிவானியைவைத்து இயக்குநர் பிரபு சாலமன் டெஸ்ட் ஷூட் செய்ததாகவும், அதில் திருப்தியடைந்தத பிறகு ‘கும்கி-2’ படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரை தேர்வு செய்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது.

கும்கி-2 படத்தின் கதாநாயகி ஷிவானி என்பதை பிரபுசாலமன் உறுதி செய்த சந்தோஷத்தில் இந்த தகவல்களை மீடியாக்களுக்கு செய்தியாக அனுப்பி வைத்தனர்.

தன்னுடைய படத்தின் கதாநாயகி யார் என்பதை தானே அறிவிக்க வேண்டும், அதுவும் படத்தின் துவக்கநாளில் அறிவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரபுசாலமனுக்கு, ஷிவானி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டதால் பத்திரிகைகளில் வெளியான செய்தி கடும்கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே ஷிவானிதான் கும்கி -2 படத்தின் கதாநாயகி என்ற தன் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார்.

அதோடு,“இன்னமும் கதாநாயகன் கதா நாயகி கிடைக்க வில்லை..தேடிக் கொண்டே இருக்கிறேன்..” என்று மீடியாக்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டார்.

நீண்ட தேடலுக்குக் கிடைத்த பட வாய்ப்பை இப்படி அவசரப்பட்டு தொலைத்துவிட்டோமே என்ற வருத்தத்தில் இருக்கிறது டாக்டர் ராஜசேகர் அண்ட் ஃபேமிலி.

Tags: