கோடிட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை…! – கோபத்தில் பார்த்திபன்

1i9a4994

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை அடுத்து பார்த்திபன் உருவாக்கியிருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

க்ரவுட் ஃபண்டிங் என்கிற முறையில் பலரது முதலீட்டில் உருவாக்கியிருக்கும் இப்படத்தில் தனது குருநாதர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கதாநாயகனாக நடிக்கி வைத்திருக்கிறார்.

கோடிட்ட இடங்களை நிரப்பு படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என பார்த்திபன் முதலில் தெரிவித்திருந்தார் பார்த்திபன்.

அப்போது போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் பின்னர் டிசம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

டிசம்பர் 30 ஆம் தேதி வெளியிடவும் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்துக்கு தியேட்டர்காரர்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் ஜனவரி 12 ஆம் தேதிக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

விஜய் நடித்த பைரவா படத்துக்கு போட்டியாக தன்னுடைய படத்தை களமிறக்க நினைத்தார்.

பைரவா படத்தை திரையிட்டு நாலு காசு சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் தியேட்டர்காரர்கள் பார்த்திபன் படத்துக்கு தியேட்டர் கொடுக்க தயாராக இல்லை.

எனினும் மனம் தளராமல் ‘பொங்கலுக்கு விஜயம் செய்கிறோம்’ என்ற வாசகங்களுடன் ஜனவரி 14 ரிலீஸ் என அறிவித்தார்.

தற்போதைய சூழலில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்கு 50 தியேட்டர்கள் கூட உறுதியாகவில்லையாம்.

தன்னுடைய படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போனதற்கு பைரவா படமே காரணம் என்று கோபமாக பேசி வருகிறாராம்.

பார்த்திபனின் லூஸ் டாக் விஜய் காதுக்குப்போனதாகவும் வழக்கம்போல் அவர் அமைதிகாத்ததாகவும் தகவல்