முரண்டு பிடித்த கே.எஸ் ரவிக்குமார், சமாதானப்படுத்திய ரஜினி

web

கோச்சடையான் பட விளம்பரங்களில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கியத்துவம் கொடுக்காததினால் அவர் வருத்தத்தில் இருப்பதை, ரஜினியிடம் மோதத் தயாராகும் கே.எஸ்.ரவிக்குமார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம் அல்லவா?

அதன் பிறகு பல காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன.

திரையுலகில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்று நினைக்கும் ரஜினி உடனே கே.எஸ்.ரவிக்குமாரை தொடர்பு கொண்டு பேசினாராம்.

அப்போது அவரிடம் பிடிகொடுக்காமல் ஏனோதானோவென்று பேசியிருக்கிறார். எனவே ரவிக்குமாரை சமாதானப்படுத்த தானே நேரில் சந்திக்க வருவதாக சொல்லியிருக்கிறார் ரஜினி. அதன் பிறகே இறங்கி வந்திருக்கிறார் ரவிக்குமார்.

நீங்கள் வர வேண்டாம் நானே வருகிறேன் என்று ரஜினியைத் தேடிப்போயிருக்கிறார்.

அங்கே தன் மனக்குமுறலையும், மாதேஷ் செய்த பாலிடிக்ஸையும் சொல்லி இருக்கிறார்.

கூல் கூல் என்று வழக்கம்போல் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார் ரஜினி. அதோடு இனி வரும் கோச்சடையான் பட விளம்பரங்களில் சௌந்தர்யாவின் பெயருக்கு நிகரான முக்கியத்துவம் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறாராம் ரஜினி. அதுவரை முரண்டுபிடித்த ரவிக்குமார் அதன் பிறகே சமாதானமாகி திரும்பி இருக்கிறார்.