சாமி-2 படத்திலிருந்து த்ரிஷா விலகியதற்கு நீங்கள்தான் காரணமா? கீர்த்தி சுரேஷ் உடன்-EXCLUSIVE INTERVIEW

keerthi-suresh-thaana-serndha-koottam2

விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களின் படநாயகியாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

விஜய்யின் அடுத்தப்படத்தின் கதாநாயகியும் இவரே.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் கீர்த்திசுரேஷை அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அசைக்க முடியாது என்பதே இப்போதைய நிலை.

கீர்த்தி சுரேஷ் உடன் ஒரு சந்திப்பு..

thaanaa-serndha-koottam-stills-022

சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த அனுபவம்…..

80கள்ல நடக்கற கதை. கேட்டதுமே நான் இம்ப்ரஸ்ஸாகிட்டேன். எனக்கு பிராமணப் பெண் கேரக்டர். இதுக்கு முன்னே இந்த மாதிரி கேரக்டர் பண்ணதில்லை. என்ஜாய் பண்ணி நடிச்ச படம் அது.

keerthi-suresh-thaana-serndha-koottam2

சூரியாவின் ரசிகை நீங்கள். அவருக்கு ஜோடியாக நடிக்கும்போது எப்படி இருந்தது?

கோ ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ணினாலும், சூர்யா சாரை ஸ்கிரீன்ல பார்த்த அந்த மரியாதைதான் இப்பவும் இருக்கு. அது என்னைக்குமே மாறாது. அவரோடு நடிச்சதைப்பத்தி உங்களை மாதிரி யாராவது கேட்கிறப்பதான் நம்ம ஃபேவரைட் ஆக்டருக்கு ஜோடியாக படம் பண்ணியிருக்கோம் என்ற எண்ணமும், பெருமிதமான உணர்வும் வருது.

thaanaa-serndha-koottam-stills-013

சாமி-2 படத்திலிருந்து த்ரிஷா விலகியதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே?

படத்தில எனக்கும் அவங்களுக்கும் காம்பினேஷன் சீனே கிடையாது. அவங்களுக்கு வேற போர்ஷன், எனக்கு வேற போர்ஷன். அப்ப இருக்கும்போது அவங்க விலகினதுக்கு நான் எப்படி காரணமாக இருக்க முடியும்?

நம்புங்கள்… எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்ன பிரச்சனைன்னு சத்தியமா இப்பவரைக்கும் எனக்கு தெரியாது. எதனால இப்படியொரு விஷயம் நடந்துச்சுன்னும் எனக்கு தெரியாது.

thaanaa-serndha-koottam-stills-016

விஜய் உடன் மீண்டும் நடிப்பது பற்றி…..

இதை எதிர்பார்க்கவே இல்லை. ரியலி சர்ப்ரைஸ். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

விக்ரம் மாதிரி சீனியர் ஹீரோ உடன் நடிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

யங்ஹீரோஸ் கூட நடிக்கிறப்ப டென்ஷன் இல்லாம நடிக்கலாம். இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமான்னு பேசிக்கிறதுக்கும், ஈஸியா நடிக்கிறதுக்கும் உதவியா இருக்கும். இது நல்லா இல்லை. இப்படி பண்ணா நல்லா இருக்கும்னு பேசி நடிக்கிறப்ப நம்மை இம்ப்ரூவ் பண்றதுக்கும் நல்ல வாய்ப்பு. சீனியர் கூட நடிக்கிறப்ப, அவங்க மேல ஒரு மரியாதை இருக்கிறதால சின்னதா பதட்டம், படபடப்பு இருக்கும்.

thaanaa-serndha-koottam-stills-024

ஒரு ஹீரோவின் அடுத்தப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வரும்போது என்ன யோசிப்பீர்கள்?

இந்த ஜோடி நல்லா இருக்கும், இந்த ப்ராஜக்ட்டுக்கு இவங்க நல்லா இருப்பாங்க, அந்தக்கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு நினைச்சு தான் மீண்டும் அப்ரோச் பண்றாங்க.

எல்லாத்துக்கும் மேல அது டைரக்டரோட சாய்ஸ். அவங்களுக்கு சரியா இருக்கும்னு தெரிந்ததால்தான் நடிக்கக் கூப்பிடுறாங்க.

thaanaa-serndha-koottam-stills-027

நடிகை சாவித்ரியின் பயோபிக்கான மகாநதி படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகள்ல எடுக்கப்படுகிற படம். அவங்க டிராமாவுல, சினிமாவுல நடிச்ச காலம், அவங்களோட பர்சனல் லைஃப், அவங்க பட்ட கஷ்டங்கள்… எல்லாம் சேர்ந்து ஒரு டிராவல் மாதிரி இருக்கும். அதே சமயம் கொஞ்சம்கூட போரடிக்காத அளவுக்கு சுவரஸ்யமான ஸ்கிரீன் பிளேவும் இருக்கும்.

நடிகையாகவும், வீட்டில இயல்பாக இருக்கும்போது எப்படி இருப்பாங்களோ அப்படியும் இரண்டுவிதமா நடிச்சிருக்கேன்.

thaanaa-serndha-koottam-stills-025

சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ்தான் சரியான சாய்ஸ் என்று முடிவு செய்தது பற்றி டைரக்டர் ஏதாவது சொன்னார்…?

இந்த ப்ராஜக்ட்டை பத்தி சொல்லும்போது அவங்க கான்ஃபிடன்ட்டா இருந்தாங்க. சாவித்திரியம்மா மிகப்பெரிய நடிகை. அவங்க கேரக்டரை பண்ணுறப்ப அதை நல்லா கேரி பண்ணனும்ங்கிறது மிகப்பெரிய ரெஸ்பான்ஸிபிலிட்டி. ரொம்ப ஹெவியான கேரக்டர்… நம்மால முடியுமான்னு எனக்குத்தான் ரொம்பத் தயக்கமா இருந்தது. தொடரி பார்த்தோம்.

உங்களோட பர்ஃபாமன்ஸ் இயல்பா இருந்ததுன்னு சொன்னாங்க, இந்த கேரக்டரை உங்களால சூப்பரா பண்ண முடியும்னு டைரக்டரும், புரட்யூஸரும் எம்மேல கான்ஃபிடன்டா இருந்ததாலதான் பண்ணினேன்.

-ஜெ.பிஸ்மி