புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக ஓவியா…!

kaatteri-launch-19

சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம்  படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி.

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டீகே இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்

கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இவர் தவிர படத்தில் இன்னும் மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்.

சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற ஹரஹர மகாதேவகி படத்தின் சிறப்புக்காட்சியில் காட்டேரி படத்தின் தொடக்கவிழாவை எளிமையாக நடத்தினர். காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அப்போது வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.