கத்தி – விமர்சனம்

vijay

விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடிக்க அஞ்சுகிற, நடிக்கத் தயங்குகிற கதை.

தனக்கும் சமுதாய பொறுப்பு உள்ளதை உணர்ந்தோ அல்லது முதல்வர் நாற்காலியை அடைவதற்கான முதலீடு என்று நினைத்தோ மிக தைரியமாக இப்படியொரு கதையில் நடித்திருக்கிறார் விஜய்.

விவசாய நிலங்களை பறித்து குளிர்பானம் தயாரிக்க முயல்கிற  பன்னாட்டு நிறுவனத்தின் அரசியலை தோலுரிக்கிற படம்.

கத்தி என்கிற கேவலமான தலைப்பில் எடுக்கப்பட்டாலும், விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று இப்படம் சொல்கிற செய்தி உன்னதமானது. உயிர்ப்பானது.

தமிழின துரோகி தயாரித்த படம் என்று குற்றம்சாட்டப்பட்ட கத்தி திரைப்படம், ஒருவேளை வெளிவராமல் போயிருந்தால், இப்படத்தை எதிர்த்தவர்கள் தமிழின துரோகிகளாகி இருப்பார்கள்.

பலவீனமான திரைக்கதை, நெளிய வைத்த முதல் இரண்டு ரீல்கள் என கத்தி படத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், விவசாயிகளின் வலியை வணிக சினிமாவில் சொன்னதற்காக வரவேற்க வேண்டிய படம் – கத்தி.