‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம் – ரகுமான் இணையும் ‘கதாயுதம்’

guru

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ ரம்மி “ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.கே அடுத்து இயக்கும் படம் – கதாயுதம்.

ரம்மிபடத்தை தயாரித்த ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பாலகிருஷ்ணனே இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஆரண்ய காண்டம், ஜோக்கர் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர் குருசோமசுந்தரம்.

துருவங்கள் 16 படத்தின் மூலம் ரீஎன்ட்ரியாகி தற்போது மீண்டும் பிசியாக நடித்து வருபவர் ரகுமான்.

இவர்களிருவரும் கதாயுதம் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடிக்கிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த இந்தியா – பாகிஸ்தான் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இவர்களுடன், காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

வசனம் – மோநா.பழனிச்சாமி

ஒளிப்பதிவு – ஞானம்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – கபிலன், மோநா பழனிச்சாமி

எடிட்டிங் – சசிகுமார்.ஜி

கலை – விஜயகுமார்

நடனம் – பிருந்தா, சிவராக் சங்கர்

ஸ்டண்ட் – சக்திசரவணன்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் – பாலகிருஷ்ணன்.கே

கதாயுதம் படத்தை பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்?

“வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும்தான் கதை.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது.

அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.கே