#கொய்யாலே – இதற்குத்தானா ஆசைப்பட்டீர் கமல்ஹாசன்?

kamal1

ட்விட்டரில் ஆக்ட்டிவ்வாக இருந்த விஷால், ‘பீப் சிங்கர்’ சிம்பு, அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற சினிமாக்காரர்கள் மக்களின் நேரடித்தாக்குதலுக்கு பயந்து தலைதெறிக்க ஓடியேப் போனார்கள்.

லேட்டஸ்டாக குஷ்பூ கூட ட்விட்டரிலிருந்து நடையைக் கட்டிவிட்டார்.

இன்னொரு பக்கம், கடந்த சில வருடங்களாக எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்த நடிகை கஸ்தூரி சமீபகாலமாக ட்விட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.

kamal-tweet

அது மட்டுமல்ல, எதைப்பற்றியாவது அல்லது யாரைப் பற்றியாவது கருத்துச் சொல்லி அவர்களின் அபிமானிகளிடம் அடிக்கடி வாங்கிக்கட்டியும் கொள்கிறார்.

சில வாரங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி வழக்கம்போல் அரசியலுக்கு வருவதுபோல் பூச்சாண்டி காட்ட, ரஜினியை நக்கல் அடித்து ட்வீட்டினார் கஸ்தூரி.

ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துப்போய் கஸ்தூரியை காய்ச்சி எடுத்தார்கள்.

அதேநேரம் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்து அவரை சந்தித்துவிட்டு வந்தார் கஸ்தூரி.

ரஜினியை பதம் பார்த்த கஸ்தூரி இப்போது கமலைப் பற்றி மலிவாக கமெண்ட் அடித்து கமல் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறார்.

நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை…

– என்று தொடங்கி புரியாத சொற்களில் என்னவோ எழுதி இருந்தார் கமல்ஹாசன்.

அதோடு, புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிகைகளில் நாளை வரும் சேதி என்ற பின்குறிப்பு வேறு.

இதை வைத்து கமல் அரசியலுக்கு வரப்போகிறார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட…

சற்று நேரத்திலேயே கமல் வைத்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது.

அதாவது, நடைபெற உள்ள கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் என்ற அணியின் பிராண்ட் அம்பாஸடராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கமல். அதை அறிவிக்கும் வகையிலேயே இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை… என்று தொடங்கிய பதிவைப் போட்டிருக்கிறார் கமல்.

kasthuri-tweet-about-kamal

அவருடைய இந்த பதிவுக்கு எதிர்வினையாக இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

“கடைசில கபடிக்குதான் இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா ? #கொய்யாலே”

தமிழக அமைச்சர்கள் கமலை அவன் இவன் என ஒருமையில் பேசுகிறார்கள்.

கமலை முதுகெலும்பில்லாத கோழை என்கிறான் எச்சி ராஜா.

கஸ்தூரியோ #கொய்யாலே என்கிறார்.

இதற்குத்தானா ஆசைப்பட்டீர் கமல்ஹாசன்?

– ஜெ.பிஸ்மி