கரு படத்துக்கு உச்சநீதிமன்ற தடை… – காரணம் என்ன?

karu1

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, குழந்தைன் நட்சத்திரம் வெரோனிகா நடிக்கும் படம் ‘கரு’.

தமிழ், தெலுங்கில் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படம், ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் தலைப்பான கரு என்பது தியா என மாற்றப்பட்டு இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

‘கரு’ என்று இருந்த டைட்டிலை ‘தியா’ என்று மாற்றி வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, ‘கரு’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு படத்தைத் தயாரித்து வரும் மணிமாறன் என்பவர் தொடர்ந் வழக்கில், லைகா தயாரிப்பில் ஏ.எல். விஜய் இயக்கிய படத்துக்கு “கரு”என்ற படத்தலைப்பை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

அதோடு படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் கரு படத்தின் பெயரை தியா என்று பெயர் மாற்றம் செய்து ஏப்ரல் 27 ந் தேதி படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்து வருகிறது லைகா நிறுவனம்.

தணிக்கை செய்யப்பட்ட படத்தின் பெயரை மாற்றம் செய்தால் மீண்டும் புதிய பெயரில் படத்திற்கும், ட்ரைலருக்கும் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும்.

தியா என்ற மாற்றப்பட்டதால் மீண்டும் தணிக்கை செய்து சான்றிதழ் வாங்க வேண்டும், அதன் பிறகே படத்தை வெளியிட முடியும். தற்போதைய சூழலில் அதற்கு பல நாட்கள் ஆகும்.

கரு பட வழக்கைப் பொறுத்தவரை, தியா படத்தின் தணிக்கை சான்றிதழை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்பே படத்தை வெளியிட முடியும்.

ஏப்ரல் 27 தியா வெளியீடு என்று வெளியாகும் செய்தி குழப்பத்தை மட்டுமல்ல, நீதித்துறை மீது பல சந்தேகங்களையும் கிளப்புகிறது.

 

karu stay notice