தப்பு பண்ணிட்டீங்களே ‘மிஸ்டர் சந்திரமௌலி’…! Comments Off on தப்பு பண்ணிட்டீங்களே ‘மிஸ்டர் சந்திரமௌலி’…!

 

அசாத்திய திறமைசாலியான நடிகர் கார்த்திக், சில வருடங்களுக்கு முன்புவரை பிசியான ஹீரோவாக இருந்தார்.

அப்போது அநியாயத்துக்கு கால்ஷீட் சொதப்புவார்.

ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார், ஆனால் படப்பிடிப்புக்கு வர மாட்டார். அப்படியே வந்தாலும் காலை ஏழு மணி கால்ஷீட்டுக்கு மதியம் 2 மணிக்கு வருவார். இதனாலேயே அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பெரும் நஷ்டம் அடைந்தனர்.

அவர்களுடைய வயிற்றெரிச்சல் காரணமாகவோ என்னவோ கார்த்திக்கின் மார்க்கெட்டும் சரிந்துபோய் வீட்டில் உட்காரும்நிலைக்குத்தள்ளப்பட்டார்.

நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி, அது போணியாகாமல்போனதால் தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அவருடைய மகன் கௌதம் கார்த்திக் உடன் முதன் முதலாக இணைந்து ‘மிஸ்டர் சந்திரமௌலி’படத்தில் நடித்து வருகிறார் கார்த்திக்,.

திரு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடிக்கும் இப்படத்தை ஜி. தனஞ்செயனின் ‘போஃப்டா’ படநிறுவனம் தயாரிக்கிறது.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காஞ்சிபுரம் முதலான இடங்களில் நடந்தபோது குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்ததோடு, தயாரிப்பாளரே மனம் குளிரும் அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாராம் கார்த்திக். அவருடைய நேரந்தவறாமையைக் கண்டு ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படக்குழுவினரே அசந்துபோய்விட்டனராம்.

இதை அவர் கதாநாயகனாக நடித்த காலத்தில் செய்திருந்தால் இன்னும் 5 வருடங்கள் கதாநாயகனாகவே நீடித்திருப்பார் கார்த்திக்.

தப்பு பண்ணிட்டீங்களே ‘மிஸ்டர் சந்திரமௌலி’…

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம்…! – விஷாலின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா?

Close