கார்த்தி நடிக்கும் படத்தின் பட்ஜெட் 55 கோடி …

karthi

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘தேவ்’.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , ‘சிங்கம் -2’ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் 55 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

ஆக்க்ஷன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன.

இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.

மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்க ) வில்லன் வம்சி ரவ , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.