2004-ல் வெளியான ‘காமராஜ்’ திரைப்படம் புதிதாக படமாக்கப்பட்ட 20 காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
தகவல் தொழில் நுட்பம் (IT), இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்த மறு வெளியீட்டின் நோக்கமாகும்.
இணைப்புக் காட்சிகளில் பிரதீப் மதுரம் காமராஜர் வேடத்தில் நடித்துள்ளார்.
சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார்.
சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவுத் தொகை காமராஜர் ஆர்வலர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.
இதன் ஓர் அங்கமாக பெருந்தலைவர் காமராஜரின் பக்தராக திகழும் புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் காமராஜ் திரைப்படத்தின் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் உதவி கோரினார்.
திரைப்படத்துக்கு உதவி செய்வதாகவும், புதுவையில் திரையிட ஆவன செய்வதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார்.
இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.