என் கதையைத் திருடி… எனக்கே படம் காட்றியா? – அட்லியை வெச்சி செஞ்ச கமல்

kamal-vijay-atlee-mersal

கொல்லன் தெருவிலேயே ஊசி விற்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்களே…

அண்மையில் நடந்தேறியதும் அப்படி ஒரு சம்பவம்தான்…

அதாவது விஜய் நடித்த மெர்சல் படத்தை கமல்ஹாசனுக்கு பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியுள்ளனர் மெர்சல் படக்குழுவினர்.

தற்போது கமலுக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் விஜய் டிவி மகேந்திரன்தான், மெர்சல் படத்தின் புரடக்ஷன் டிசைனர்.

அட்லியின் உறவினரான இவர்தான், அட்லியை ஷங்கரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டவர்.

அதோடு, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தி ராஜாராணி படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.

கமல் மற்றும் அட்லிக்கு நடுவில் இருவருக்கும் பொதுவானவராக இருப்பதால், மெர்சல் படத்தை கமலைப் பார்க்க வைத்திருக்கிறார் மகேந்திரன்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலுடைய அலுவலகத்தில் உள்ள திரையரங்கில் மெர்சல் படத்தை திரையிட்டனர்.

அதன் பிறகு, விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஆகியோரை அழைத்து, அவர்களை பாராட்டியிருக்கிறார் கமல்.

மெர்சல் படத்தின் கதை, கமல் நடித்த அபூர்வ சகோதரர்களின் உல்டா என்பது ஊரறிந்த விஷயம்.

ஊரறிந்த அந்த உண்மை, கமலுக்குத் தெரியாமல் இருக்குமா?

என் கதையைத் திருடி… எனக்கே படம் காட்றியா? என்று அட்லியிடம் கேட்டாரோ இல்லையோ…. ஆனால் அட்லியை செமத்தியாய் வெச்சி செஞ்சி அனுப்பியிருக்கிறார்.

அதாவது, மெர்சல் படக்குழுவினரை அழைத்துப் பேசிய இடத்தில் தன்னுடைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் விளம்பரத்தை வைத்து, அதன் பின்னணியில் மெர்சல் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் கமல்.

kamal-vijay-atlee-mersal

அவருடைய அந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாத அட்லி, அவசரகுடுக்கையைப்போல் அந்தப் போட்டோவை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பியது மட்டுமல்ல, ‘அப்பு, அட்லிக்கு வச்சாரு ஆப்பு’ என்கிற ரீதியில் கதையைத் திருடிய அட்லியை கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.

தன்னை மதித்து மெர்சல் படம் காட்டியவர்களையும் பாராட்ட வேண்டும், அதே நேரம் தன்னுடைய கதையைத் திருடி படம் எடுத்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்…

இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக கையாண்டதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் கமல்.

கமல்ஹாசன்  அரசியலுக்கு வருவதற்கு இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?

– ஜெ.பிஸ்மி