நாய்களுக்கு பின்னால் செல்லும் விஷால்களுக்கு நந்தினி பற்றி கவலை இல்லை…

vishal-dog-protest

 

நாய்களுக்கு பின்னால் செல்லும் விஷால்களுக்கும் த்ரிஷாக்களுக்கும் நந்தினி பற்றி கவலை இல்லை.

நந்தினிக்காக குரல் கொடுத்தால் நமக்கு பப்ளிசிட்டி கிடைக்காது என்று நினைத்தோ என்னவோ…

vishal-dog-protest1சினிமாக்காரர்கள் நந்தினி பக்கம் தன் பார்வையை திருப்பவே இல்லை.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் 17 வயது மகளான நந்தினி, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, கிணற்றில் பிணமாகக் கிடந்தார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கீழமாளிகையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உட்பட நான்கு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜன.15-ம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத் தினர் அரியலூரில் ஜன.28-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில், நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேகுடன் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துணிச்சலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்த கமல், தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.

“நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை.

குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை.

நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன்.

இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன்.

என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல”

என்று தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்.