20 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இந்தி நடிகை…

vip2-stills-012

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து  வசூலில் சரித்திரம் படைத்த ‘கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி எஸ் .தாணுவும் வுண்டர்பார் பட நிறுவனம் மூலம் தனுஷும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வேலை இல்லா பட்டதாரி – 2’.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வேலை இல்லா பட்டதாரி முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அமலாபால் நடிக்கிறார்.

வேலை இல்லா பட்டதாரி முதல் பாகத்தில் நடித்த விவேக் , சரண்யா பொன்வண்ணன், பி. சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் ஆகியோரும் இந்த நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இந்த திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய கஜோல் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

பிரபுதேவா, அரவிந்த்சாமியுடன் மின்சார கனவு படத்தில் நடத்த கஜோல் 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படம் இது.

தனுஷ் கதாநாயகனாக நடித்து கதை, வசனம் எழுதும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குகிறார் .

இவர்  2014-ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய திரையுலகில் “Photo Realistic Motion capture” 3D  – என்னும் தொழில் நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி “கோச்சடையான்” என்ற  படத்தை இயக்கியவர் இவர்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு –  சத்யராஜ்

கலை – சதீஷ் குமார்

உடை வடிவமைப்பு – பூர்ணிமா

சண்டை பயிற்சி –  ‘அனல்’அரசு.

தயாரிப்பு வடிவமைப்பு – அர்விந்த் அசோக் குமார்

இணை தயாரிப்பு – D.பரந்தாமன், A.K.நட்ராஜ்

தயாரிப்பு – கலைப்புலி எஸ். தாணு, தனுஷ்.

‘வேலை இல்லா பட்டதாரி – 2’ திரைப்படத்தின் படபிடிப்பை ரஜினிகாந்த் கிளாப் அடித்து சென்னையில் இன்று துவக்கி வைத்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது.