கதிர் நடிக்கும் புதிய படம் தொடங்கியது… Comments Off on கதிர் நடிக்கும் புதிய படம் தொடங்கியது…

கதிர் நடிக்கும் புதிய படம் பிரசாத் லேப்-பில் தொடங்கியது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.

இவர் ‘மன்னார் வளைகுடா’ இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர்.

ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம். இவர் ‘உறுதி கொள் ‘ படத்தின் ஒளிப்பதிவாளர்.

இவருடன் இன்னொருவர் சரவணன் ஜெகதீனும் இணைந்துள்ளார்.

இசை நவீன் சங்கர்.

இவர் ‘விசிறி’ படத்தின் இசையமைப்பாளர்.

பாடல்கள் ‘சண்டிவீரன்’ புகழ் மணி அமுதன்.

படம் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்…?

“இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான கதாநாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது.

நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான் முடிவு என்ன என்பதே கதை.

அது என்ன பிரச்சினை? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினைதான் அது.

இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான கதாநாயகன் தேடிய போது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர்.

அவர் கதை பிடித்து சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி.

கதிருக்கு ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’ படங்களுக்குப் பிறகு இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும்.

தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று நகர இருக்கிறது.

‘பென்ஹர்’, ‘உழவன் மகன்’ படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும்” என்றார் இயக்குநர் நம்பிக்கையுடன்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
அவர் அள்ளியது அரிசியை அல்ல, உமியை… – அறம் பட இயக்குநர் சொன்ன அடடே தகவல்

Close