கடவுள் மறுப்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ‘கடவுள் – 2’

kadavul2

பகுத்தறிவு கருத்துக்களை உள்ளடக்கி தமிழில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிக அற்புதமான படம் – கடவுள்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்… 1997 ஆம் ஆண்டில் வெளியான கடவுள் படத்தை அன்றைய பகுத்தறிவுவாதியான வேலுபிரபாகரன் இயக்கியிருந்தார்.

அதன் கருத்துக்காகவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது.

ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தை எடுத்து பணம் பார்ப்பதுதான் தற்போது திரைத்துறையில் பிழைக்கும் வழிகளில் ஒன்று.

இந்த வித்தையை தாமதமாகப் புரிந்து கொண்டு, ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கடவுள்-2’ என்ற பெயரில் இயக்க இருக்கிறார் வேலுபிரபாகரன்.

கடவுள் படத்தை வேலுபிரபாகரன் இயக்கியதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

வேலுபிரபாகரனுடன் அருண் பாண்டியன், மணிவண்ணன், ரோஜா ஆகியோரும் அதில் நடித்திருந்தனர்.

இரண்டாம் பாகத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

முதல் பாகத்துக்கு இசை அமைத்த இளையராஜாவே இரண்டாம் பாகத்துக்கும் இசை அமைக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார் வேலுபிரபாகரன்.

‘ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை…’ என்ற வாசகத்தோடு வெளியான இப்படத்தின் விளம்பரம் நியாயமாக கடவுள் மறுப்பாளர்கள் மத்தியிலும் பகுத்தறிவாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மாறாக, கடவுள்-2 படத்தின் விளம்பரம் கலக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

ஏன்?

ஒரு காலத்தில் உன்னதமான பகுத்தறிவுவாதியாக விளங்கிய வேலுபிரபாகரன் கடந்த சில ஆண்டுகளாக காவிகளுக்கு சொம்பு தூக்க ஆரம்பித்துவிட்டார். மோடியை பாராட்டும் அளவுக்கு மூளை மழுங்கியும் போய்விட்டார்.

இன்னொரு பக்கம், வேலுபிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி போன்ற பலான படங்களையும் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

oru-iyakkunarin-kadhal-diary_tamilscreen-stills-003

இப்படிப்பட்ட வேலுபிரபாகரன் இப்போதுபோய் கடவுள்- 2 என்று படம் எடுப்பதை என்னவென்று சொல்வது?

பேசாமல்… காமம்- 2 என்ற பெயரில் வேலுபிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி படங்களின் இரண்டாம்பாகத்தை எடுத்துத் தொலைக்கலாம்…

– ஜெ.பிஸ்மி