SCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் இல்லை..! – ஜூலைக்கு தள்ளி வைப்பு…!

kaala-stills-005

 

ரஜினி  நடித்துள்ள ‘காலா’ படம் ஜூன் 7-ஆம் தேதி உலம் முழுக்க வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்படு வருகிறது.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித்தும், ரஜினியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தில், நானா படேகர் வில்லனாக நடிக்கிறார்.

ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் காலாவின் காதலியாக ஹுமா குரேஷி[யம், காலாவின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிக்கின்றனர்.

‘காலா’வின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்ட சூலில் படத்தின் வியாபாரங்கள் சூடுபிடித்துள்ளது.

காலா படத்தின் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மும்மொழிகளின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் டிவி நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

தெலுங்கு, ஹிந்தி டப்பிங்கை அவுட்ரைட்ஸ்முறையில் விற்காமல் அங்குள்ள லோக்கல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே வெளியிடுகிறது.

ஏப்ரல் 27 அன்று வெளியாகவிருந்த காலா படம் திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில்  மீண்டும் காலா படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க உள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக தமிழகமே கொதிப்பான சூழலில் இருக்கும் இந்த நேரத்தில் காலாவை ரிலீஸ் செய்தால், கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள், விமர்சனங்கள் வரும் என்பதால் படத்தின் ரிலீஸை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி ரஜினி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் தனுஷ் சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

ரஜினி எடுத்தது நல்ல முடிவுதான்…