காலாவுக்கு ஏ சான்றிதழ்…! – ரிவைசிங்கில் இப்படியொரு சிக்கல்….!?

kaala-stills-002

ரஜினி நடித்துள்ள காலா படத்தை ஏப்ரல் 27 அன்று வெளிடய திட்டதிட்டிருந்தனர்.

ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படங்களை வெளியிடட பிறகே காலா படத்தை வெளியிட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காலா படத்தை தணிக்கைக்கு அனுப்புவதற்கு அவசியமான பப்ளிசிட்டி க்ளியரன்ஸ் லட்டரை கொடுக்காமல் இழுத்தடித்தது தயாரிப்பாளர் சங்கம்.

இதனால் கடுப்பான காலா படத்தின் தயாரிப்பாளர் கோர்ட்டுக்குப்போகலாமா என யோசித்தார். கடைசியில் சில நாள் தாமதத்துக்குப் பிறகு கடிதம் கொடுக்கப்பட்டு, சமீபத்தில் காலா படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தனர்.

படத்தைப் பார்த்துவிட்டு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததோடு, சில காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டார்களாம். அதுமட்டுமல்ல. சில ஆட்சேபகரமான வசனங்களையும் மியூட் என்கிற ஒலி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான இயக்குநர் பா.ரஞ்சித், தணிக்கைக்குழுவினரிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவருடைய ஆவேசத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், நாங்கள் சொன்னதை ஏற்கிறீர்களா? அல்லது ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுமா என்று கேட்க அமைதியாய் அந்த இடத்தைவிட்டு வெளியேநி இருக்கிறார் பா.ரஞ்சித்.

எப்படியாவது ஏப்ரல் 27 ந் தேதி காலா படத்தை வெளியிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் யு/ஏ சர்டிபிகேட்டுடன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

திரையுலக ஸ்டிரைக்கினால் பாதிக்கப்பட்ட படங்கள் வெளியான பிறகே காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருப்பதால், இப்போதைக்கு காலா படத்தை ரிலீஸ் செய்ய முடியாது.

எனவே காலா படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

ரிவைசிங் கமிட்டியில் ஒரு காமெடி நடிகர் இருக்கிறார்.

ரஜினி மீது தீரா வெறுப்பு கொண்ட அவர் யு/ஏ வுக்கு பதில் ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டால் என்னாவது?