‘காலா’ படத்தில் நடிக்கும் ஒரிஜினல் ரஜினி…!

aravind-akash

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

சில நாட்கள் ரஜினியை வைத்து படமாக்கப்பட்டநிலையில் தற்போது நானா படேகர் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களை வைத்து படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார் பா.ரஞ்சித்.

சுமார் 45 நாட்கள் மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கடைசி சில நாட்கள் மீண்டும் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினி.

காலா படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளும்போதுதான் மீண்டும் பரபரப்பு செய்திகள் ஊடகங்களில் உலா வரும்.

இதற்கிடையில் காலா படம் குறித்து புதிய தகவல்..

காலா படத்தில் முக்கிய கேதாபாத்திரங்களில் நடிக்கும் நானா படேகர், சமுத்திரகனி ஆகியோருடன் அரவிந்த் ஆகாஷும் நடிக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு மும்பை போலீஸ் வேடம்.

அரவிந்த் ஆகாஷின் கதாபாத்திரத்தின் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்!

இது ரஜினிகாந்தின் நிஜப்பெயர் என்பதால் அரவிந்த் ஆகாஷ் நடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்துக்கு இந்தப்பெயரை சூட்டவிரும்பிய பா.ரஞ்சித், ரஜினியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

காலா படத்தில் அந்தக் கேரக்டர் பாசிட்டிவ்வான கேரக்டர்தான் என்பதை கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே தன்னுடைய பெயரை சூட்டுவதற்கு சம்மதித்தாராம் ரஜினி.

வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் அரவிந்த் ஆகாஷ்.
ஆனாலும் இன்னும் க்ளிக் ஆகாமலே இருக்கிறார்.

தன்னுடைய குருநாதர் வெங்கட் பிரபுவுக்கு வேண்டியப்பட்டவர் என்பதாலோ என்னவோ அரவிந்த் ஆகாஷுக்கு பா.ரஞ்சித் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

குருநாதர் மூலம் கிடைக்காத பிரேக் சிஷ்யர் இயக்கும் காலா படம் மூலமாகவாவது கிடைக்கிறதா பார்க்கலாம்.