ஏலத்துக்கு வருகிறது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சொத்து….

kamal-haasan-rajinikanth-kbalachander

ரஜினி, கமல் தொடங்கி எத்தனையோ நட்சத்திரங்களை புகழ் வெளிச்சத்தில் மின்ன வைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த கே.பாலசந்தரை அடுத்தடுத்த தலைமுறையும் நினைவுகூர்கிற வகையில் திரைப்படத்துறையினர் அவருக்கு எந்த மரியாதையையும் செய்யவில்லை.

kb-news1

நன்னிலத்தில் கே.பாலசந்தர் பிறந்த வீடு அமைந்திருந்த இடத்தில் தற்போது ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அந்த இடத்தில் கே.பிக்கு ஒரு சிலை வைத்தனர்.

அதோடு அவரை மறந்தேவிட்டனர்.

இந்நிலையில் ஒரு அதிர்ச்சி செய்தி.

கே.பாலசந்தருக்கு சொந்தமான இடம் ஏலத்துக்கு வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி.

UCO வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் போனதால் கே.பி.யின் அலுவலகம் ஏலத்துக்கு வர இருக்கிறது.

நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

ஏலத்துக்கு வர இருப்பது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சொத்து மட்டுமல்ல, அவரது மரியாதையும்தான்.

அவரால் வாய்ப்பு பெற்று… அவரால் வளர்ந்து…. இன்றைக்கு கோடிகோடியாய் சம்பாதிக்கும் நட்சத்திரங்கள் நினைத்தால் கே.பாலசந்தருக்கு நேரவிருக்கும் இந்த அவமானத்தை, அவமரியாதையை தடுக்க முடியும்.

குருநாதரின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனசு யாருக்கு இருக்கிறது என்று பார்ப்போம்?

 

தினமணி, பிப்ரவரி 11, 2018

k-balachanders-property-in-auctions2c