ரசிகர்களை குழப்பிய ஜெயம்ரவியின் JR24

jayam-ravi1

டிக் டிக் டிக் படத்தை அடுத்து இப்போது ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ‘ஜெயம்’ ரவி.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளநிலையில் மோகன் ராஜா இயக்கத்தில், ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜாவும், ‘ஜெயம்’ ரவியும் இணைந்து ஒரு வீடியோவாக வெளியட்டனர்.

‘அடங்க மறு’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, ‘தனி ஒருவன்-2’வில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மற்றொரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சில தினங்களுக்கு முன் வெளியானது.

‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

இந்த படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இது ‘ஜெயம்’ ரவியின் 24-வது படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ‘ஜெயம்’ ரவியின் படப்பட்டியலைப் பார்த்தால் அடங்கமறு படம்தான் 24-வது படம்.  என்ன காரணத்தினாலோ 26 ஆவது படத்தை 24ஆவது படம் என்று அறிவித்துள்ளனர்.

இந்த குளறுபடி காரணமாக ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.