பத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்… -நிதானம் இழந்த ‘ஏய்’ ரஜினிக்கு கண்டனம்…

rajinikanth_sterlite_thuthukudi_airport1

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் நூறாவது நாளில் வன்முறை வெடித்து காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நேற்று (30-05-2018) தூத்துக்குடி சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி ஏற்படுத்திய சர்ச்சைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத ரஜினிகாந்த், நிதானம் இழந்ததோடு, ‘ஏய், ஏய்’ என்று அநாகரீகமானமுறையில் குரல் உயர்த்தினார்.

rajinikanth_sterlite_thuthukudi_airport

ரஜினியின் இந்த செயல் அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக்காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கோ பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்த சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர், பாரதிதமிழன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

“பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ரஜினிகாந்த்தின் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை குணங்களை நடிகர் ரஜினிகாந்த் வளர்த்துக் கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் செயலுக்கு தமிழ்ஸ்கிரீன்.காம் கண்டனத்தை பதிவுசெய்கிறது.