மகளைப் பெருமைப்பட வைத்த ஜோதிகா….!

magalir-mattum_jyothika-stills-006

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா. ஏறக்குறைய 7 வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்தப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா தற்போது நடித்துள்ள படம் – ‘மகளிர் மட்டும்’.

‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா, முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

‘மகளிர் மட்டும்’ படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மீடியாக்களின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் ஜோதிகா, மகளிர்மட்டும் படம் வெளியாவதைத் தொடர்ந்து அப்படத்தின் புரமோஷனுக்காக ஊடகதயவை நாடி வந்திருக்கிறார்.

தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் அவர் அனுப்பிய செய்திகுறிப்பில்,

“ஒரு பயணத்தின்போது மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

இயக்குநர் பிரம்மா என்கிற ஒரு ஆணிடம் இருந்து இந்த கதை எப்படி வந்தது என முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் , பானுப்ரியா ஆகியோரோடு இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாகவும் இருந்தது.

எங்கள் முதல் நாள் படப்பிடிப்பு ஒரு படகில் நடைபெற்றது.

அப்போது என்னால் சரியாக வசனத்தைப்பேசி நடிக்க முடியவில்லை.

அப்போது அவர்கள் மூவரும்தான் என்னை Comfort zoneக்கு கொண்டுவந்தார்கள்.

நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

மகளிர் மட்டும் படத்தில் நான் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது.

அதற்காக எனக்கு சூர்யா இரண்டு நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார்.

அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார்.

என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று நான் டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது.

மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ….

நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன்.

நான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்க்கு சென்று வருகிறேன்.

நான் என்னோடு நடித்த சக நடிகர்களை விட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோதிகா.