ஜெயிக்கிற குதிர… ஜெயிக்குமா?

jeyikkira-kuthirai

திருட்டுப்பயலே படத்தில் நடித்த ஜீவன், தனக்குக் கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள தவறிப்போனதால் முன்னாள் ஹீரோவானார்.

பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டு(ம்) வந்தவர் ஜெயிக்கிற குதிர என்ற படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தன.

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆஞ்சி.

இசை – கே.ஆர்.கவின்சிவா

எடிட்டிங் – ரஞ்சித்குமார்

கலை – மணிகார்த்திக்

ஸ்டன்ட் – தளபதிதினேஷ்

நடனம் – கூல் ஜெயந்த்

தயாரிப்பு – திரேஜா

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஷக்தி என்.சிதம்பரம்

ஜெயிக்கிற குதிர ஜெயிக்குமா?

இயக்குநர் ஷக்தி என்.சிதம்பரத்திடம் கேட்டோம்..

“சந்தேகமே வேண்டாம். இந்த படம் நிச்சயமாக ஜெயிக்கும். இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அனைத்து அம்சங்களும் இருந்தால்தான் அவர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெரும். அப்படி அனைத்து அம்சங்களும் உள்ள படம்தான் இந்த ஜெயிக்கிறகுதிர. தொடக்கம் முதல் முடிவுவரை செம காமெடி கலாட்டா. ஜெயிக்கிற குதிர  விரைவில் வெளியாக உள்ளது”