சமந்தா உடன் நடிக்கும்போது விஷாலுக்கு சந்தோஷம்…!

vishal

விஷால் நடிப்பில் ,விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் விஷால் சமந்தா, இயக்குநர் P.S. மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, நடிகர் ரோபோ ஷங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஷால், “இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம்.

பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம்.

இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம்.

ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் படம் வெளி வருவதில் தாமதமாகிவிட்டது.

ஆர்.கே. நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும் ஒருவன். மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது.

என்னுடைய படம் நான் வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இன்னும் ஒரு ஆறு மாதம் படம் தள்ளிப்போனால் வட்டி அதிகரிக்கும்.

நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் சுயநலவாதியாக நினைத்து இருந்தால் இந்தப்படம் கடந்த ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் ஆகியிருக்கும்.

இந்த தொழில் நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால்தான் இந்த படத்தை தள்ளி போட்டேன்.

பணத்தை நான் இன்று இழந்து விட்டால் எப்போ வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும். ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என் குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டேன்.

சொன்ன விஷயத்தை செய்துகொண்டு இருக்கிறோம்.

நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன.

அதற்கான பதிலை எங்களுடைய செயல்பாடுகளில்தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம்.

அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும்.

மித்திரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது.

துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம்.

இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது.

ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் அனுபவிக்க அனுபவமாக இருந்தது.

இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் நடித்திருக்கிறேன்.

சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும்.  படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன.

என்னுடைய குருநாதர் அர்ஜுன் சார் இதில் வில்லனா நடிக்கிறார்.

என் அப்பாவுக்கு தொலைபேசியில் இந்த பையன நான் ஹீரோவாக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திட்டான்னு சொன்னார்.

அவர்தான் எனக்கு ஊக்கம் கொடுத்து செல்லமே படத்தில் ஹீரோவாக உருவாக்கினர்.

ரெண்டு பேருக்கும் கடைசில் சண்டை காட்சி ஒன்று உள்ளது அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம்.

படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.