இரும்புத்திரை – டிஜிட்டல் இந்தியாவுக்கு எச்சரிகை மணி…!

Irumbuthirai Stills 004

விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’.

விஷாலுடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரும்புத்திரை படம் மே 11-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

இந்தநிலையில், இப்படத்தின் முதல் பாதியை மட்டும் மிகவும் துணிச்சலாக பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேகமாக திரையிட்டனர்.

படத்தின் துவக்கக்காட்சிகள் என் பெயர் சூர்யா என்ற தெலுங்கு டப்பிங் படத்தின் காட்சியை நினைவூட்டினாலும், டிஜிட்டல் இந்தியாவுக்கு எச்சரிகை மணி அடிப்பதாக இருந்தது இரும்பத்திரை.

உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட தற்போதைய சூழ்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வளவு ஆபத்தானது என்பதை தோலுரிக்கிறது இந்தப்படம்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மிகப்பெரிய மோசடிகளை செய்ழ வருகின்றன பல்வேறு மாஃபியா கும்பல்.

உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நமது வங்கி விவரங்களை திருட முடியும்.

நம்முடைய பணத்தை அபகரிக்க முடியும்.

நமது அந்தரங்க தரவுகளைத் திருட முடியும்.

இரும்புத்திரை படம் இது குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.