30 கோடி இங்கே இருக்கு, மீதி 30 கோடி எங்கே? – வாழைப்பழ காமெடியான இரண்டாம் உலகம் பட்ஜெட்!

1456

இரண்டாம் உலகம் படத்தைவிட பேரதிர்ச்சி என்ன தெரியுமா?

அந்தப் படத்தின் பட்ஜெட் 60 கோடி ரூபாய் என்ற தகவல்தான்.

என்னது இந்த கடி படத்துக்கு இவ்வளவு செலவு செய்தார்களா? என்று தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, படத்துறையில் உள்ள பல பெரிய இயக்குநர்களே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகம் படம் தயாரிப்பில் இருந்தவரை, அதன் உண்மையான பட்ஜெட் எவ்வளவு? என்ற விவரம் வெளியே தெரியவில்லை.

வந்த தகவல் எல்லாமே குத்து மதிப்பாக சொல்லப்பட்ட வதந்திகள்தான்.

இதோ இப்போது…இரண்டாம் உலகம் படம் வெளியாகி முதல்நாளே ‘பப்படம்’ ஆன பிறகு, படத்தின் பட்ஜெட் 60 கோடி என்ற தகவல் வெளியே வந்திருக்கிறது.

இரண்டாம் உலகம் படத்தைத் தொடங்கிய நாள் முதல் செல்வராகவன் கேட்டபோதெல்லாம் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள் – தயாரிப்பாளர்கள். கடைசியில் கணக்கு பார்த்தால் 60 கோடி அரோகரா. சொன்ன பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவை அதிகமாக்கிவிட்டாராம் செல்வராகவன்.

பிவிபி தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய பிரமுகர், இரண்டாம் உலகம் படத்தைப் பார்த்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த பிறகு, ”செலவு பண்ணின தொகையில் 30 கோடி இங்கே இருக்கு, மீதி 30 கோடி எங்கே போச்சு?” என்று இயக்குநர் செல்வராகவனிடம் கேட்டிருக்கிறார்.

அவரிடமிருந்து இப்படியொரு அதிரடி கேள்வியை எதிர்பார்க்காத செல்வராகவன், ஒரு கணம் அதிர்ச்சியடைந்து, பிறகு சுதாரித்துக்கொண்டு, ”அந்தப் பழம்தாண்ணே இது” என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியிடம் செந்தில் கணக்கு சொல்வதுபோலவே அந்த 30 கோடிதான் இது என்று பதில் சொன்னாராம் செல்வராகவன்.