இப்படைவெல்லும் படத்துக்கு முதல் நாளே சங்கு…

ippadai-vellum-audio-stills-026

உதயநிதி ஸ்டாலினுக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறது.

அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தியேட்டரில் ஓடாமல் தியேட்டரைவிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.

உதயநிதியின் முதல்படமான ஓகே ஓகே படம் மட்டுமே கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியான மற்ற படங்கள் எதுவுமே கல்லாப்பெட்டியை நிரப்பவில்லை.

இதற்கு உதயநிதியின் லேட்டஸ்ட் படமான இப்படை வெல்லும் படமும் விதிவிலக்கில்லை.

சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கியிருக்கும் ‘இப்படை வெல்லும்’ நவம்பர் 9-ஆம் தேதி வெளியானது.

அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள்தான் சமீபகாலமாக வியாழக்கிழமைகளில் வெளியாகின்றன.

அதைப் பார்த்து, ‘இப்படை வெல்லும்’ படத்தையும் வியாழக்கிழமை வெளியிட்டனர்.

இயக்குநர் கௌரவ் நாராயணனின் பேச்சைக் கேட்டு ‘இப்படை வெல்லும்’ படத்தை வியாழக்கிழமை அன்று வெளியிட்ட லைகா நிறுவனம் தற்போது இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறது.

அதாவது தமிழ்நாடு முழுக்க ஒரு தியேட்டரில் கூட கூட்டம் இல்லை. ஒவ்வொரு தியேட்டரிலும் 50 பார்வையாளர்கள் கூட வரவில்லை.

இதனால் நேற்றோடு பல தியேட்டர்களில் இப்படை வெல்லும் படத்தை தூக்கிவிட்டு இன்று முதல் வேறு படங்களை திரையிட்டுள்ளனர்.

இப்படை வெல்லும் படம் வெளியானதையொட்டி முதல்நாள் தியேட்டர் ரவுண்ட்ஸ் சென்றிருக்கிறார் உதயநிதி.

ஒன்றிரண்டு தியேட்டர்களுக்கு சென்றவர் மூட்அவுட்டாகி திரும்பிவிட்டாராம்.

காரணம்… சென்னையில் ‘இப்படை வெல்லும்’ வெளியான தியேட்டர்கள் காலியாக இருந்ததுதான்.

அது மட்டுமல்ல முதல்காட்சி முடிந்த சில மணி நேரத்திலேயே படத்தைப் பற்றிய நெகட்டிவ் டாக் பரவ ஆரம்பித்ததால், இப்படைவெல்லும் படத்துக்கு முதல் நாளே சங்கு ஊதிவிட்டனர்.