உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிகள்…

anjan-terrance-lewis

இசையும், நடனமும் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன.

பாரம்பர்ய இசையை, நடனத்தை விரும்பும் மக்கள் இன்னமும் இருந்தாலும், இளைஞர்களின் விருப்பத்தேர்வாக நவீனவடிவத்திலான நடனமாகவோ இசையாகவோதான் இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது ஹிப்-ஹாப் இசை.

ஹிப்-ஹாப் இசைக்கென்றே பிரத்யேகமான நடனம் உள்ளது. அதை வைத்து நடனப்போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடத்தப்படுகின்ற ஹிப்-ஹாப் நடனப் போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் அஞ்சான் சிவக்குமார் என்ற இளைஞரால் வடிவமைக்கப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது.

இந்தப்போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இறுதி 8 போட்டியாளர்களில் ஒரு அணியாக இடம்பிடித்த இந்திய அணி, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், லாஸ் வேகாஸில் 2016 ஆம் ஆண்டில் நான்காவது இடமும் பிடித்தது.

இந்த ஆண்டுக்கான உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இதில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களாக, வீ கம்பெனி [V company – WWinners of Dance + TV RReality Show], எக்ஸ்1எக்ஸ் குழுவினர் [X1X Crew – FFinalists at India Banega Manch TV Reality Show], ஷோ ஸ்டாபெர்ஸ் குழுவினர் [Showstoppers Crew – Bronze medalist at Indian Hip Hop Dance Championship 2017], டி பைரேட்ஸ் குழுவினர் [D Pirates [Bronze medalist at Indian Hip Hop Dance Championship 2017] ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வென்று வருக…