கமலுக்கு 40 கோடி… ஷங்கருக்கு 40 கோடி…..! – ‘இந்தியன் 2’ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா? Comments Off on கமலுக்கு 40 கோடி… ஷங்கருக்கு 40 கோடி…..! – ‘இந்தியன் 2’ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் – ‘இந்தியன்’.

அன்றைக்கு முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமான படமாக இந்தியன் உருவானது.

பாலிவுட்டில் அப்போது நம்பர் ஒன்னாக இருந்த மனிஷா கொய்ராலா, ஊர்மிளா இருவரும் கதாநாயகியாக நடித்த இந்தப்படத்தில், சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்திருந்தனர்.

சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தியன் படத்தில் நடித்த கமலுக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

படத்தின் இயக்குநரான ஷங்கருக்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.

இந்தியன் படம் 30 கோடிக்கு மேல் வசூலித்ததாக அப்போது தகவல் வெளியானது.

ஏறக்குறைய 21 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் கமல், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இந்தத் தகவலை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பல தெலுங்குப் படங்களைத் தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவித்தனர்.

தற்போது 2.0 படத்தை இயக்கி வரும் ஷங்கர், ‘இந்தியன் 2’ படத்தை அடுத்த வருடம் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், இந்தியன்- 2 படத்திலிருந்து தில் ராஜு விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியன்-2 படத்தின் ப்ராஜக்ட்டிலிருந்து தில் ராஜு விலகியதால், கமல்ஹாசனும், ஷங்கரும் தற்போது லைகா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

அது சரி… தில்ராஜு ஓட்டம் பிடித்தது ஏன்?

இந்தியன்- 2 படத்தில் நடிக்க கமலுக்கு 40 கோடி சம்பளம், ஷங்கருக்கு 40 கோடி சம்பளம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

40 கோடி சம்பளத்துடன் கமல், ஷங்கர் இருவருக்கும் லாபத்தில் தலா 30 கோடி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்த தில் ராஜு, இந்தியன்- 2 படத்தை நாம் தயாரித்தால் நிச்சயம் தெருக்கோடிதான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு பின்வாங்கிவிட்டாராம்.

– ஜெ.பிஸ்மி

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
மெர்சல் பிரச்சனையில் ஒருவழியாக வாய் திறந்தார் விஷால்….

Close