கார்த்திக் சுப்பாராஜுக்கு ஏது இவ்வளவு பணம்?

stone-bench-films-tamilscreen-stills-040

தமிழின் தலைசிறந்த மொக்கப்படமான இறைவி படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், கடந்த 2014 ல் ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இதுவரை 150 படத்துக்கு மேலாக சப் டைட்டிலிங் செய்துள்ளதாம்.

2015 ல் பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 5 குறும்படங்களை இணைத்து வெளியிட்டது.

ஒரு புதிய முயற்சியாக இருந்ததே தவிர வெற்றியைத்தரவில்லை.

ஆனாலும் 2016 ல் அவியல் என்ற பெயரில் 4 குறும்படங்களை இணைத்து வெளியிட்டது.

இதன் மூலம் குறும்பட இயக்குநர்களுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க வழி காட்டப்பட்டது.

தற்பொழுது அடுத்தகட்டமாக, வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால்பதித்து ‘மேயாத மான்’ ‘மெர்குரி’ என்ற இரண்டு திரைப்படங்களையும், கள்ளச்சிரிப்பு என்ற வெப் சீரீஸ் ஒன்றினையும் தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

மெர்குரி படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். பிரபுதேவா நடிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேயாத மான் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, சின்னத்திரை நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.

கள்ளச்சிரிப்பு என்ற வெப் சீரீஸ்ஸை ரோஹித் எழுதி நடித்துள்ளார்.

இத்தனை புராஜக்ட்டுகளை தயாரிக்க கார்த்திக் சுப்பாராஜுக்கு ஏது இவ்வளவு பணம்?

சோமசேகர், கல்ராமன் என்ற அமெரிக்க தொழில்அதிபர்கள் கார்த்திக் சுப்பாராஜை நம்பி பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர்.