அய்யோ… பாவம்… ஹன்சிகாவுக்கு வந்த நிலைமையைப் பார்த்தீங்களா?

Hansika-Motwani

 

கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை.

மொத்த சம்பளத்தில் 90 சதவிகிதத்தை கருப்புப்பணமாக மும்பையில் டெலிவரி செய்ய வேண்டும், என்னுடைய துணிக்கடையில்தான் காஸ்ட்யூம் வாங்குவேன்… அதற்கு 20 லட்சம் தர வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டார்.

தன்னைத் தேடி வந்த படாதிபதிகளை இப்படி எல்லாம் பாடாய்ப்படுத்தியதால் அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது.

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகாவை தற்போது தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, முன்னணி ஹீரோக்கள் சட்டை பண்ணுவதில்லை.

அவர் கைவசம் இருக்கும் தமிழ்ப்படங்களில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரே படம்  விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்து வரும் ‘துப்பாகி முனை’ என்ற படம்தான்.

தமிழில் இந்தப்படத்தில் மட்டும் நடித்து வரும் ஹன்சிகா முன்னணி ஹீரோக்களின் படம் தன்னைத் தேடி வரும் என மாதக்கணக்கில் காத்திருந்தார்.

ஆனால் தேடி வந்ததோ அறிமுக இயக்குநர் ஜமீல் என்பவர் இயக்கும் படம்தான்.

இந்தப் படத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அதன் பிறகு வீட்டில் சும்மா உட்கார வைத்துவிட்டால் என்ன செய்வது? எனவே பிகு பண்ணிக்கொள்ளாமல் புதுமுக இயக்குநர் படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார்.

போகிற போக்கைப்பார்த்தால் ஹன்சிகா விரைவில் வையாபுரிக்கு ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

– ஜெ.பிஸ்மி

Tags: