குப்புறகவிழ்ந்த குலேபகாவலி…

gulebagavali-movie-stills1

பொங்கலை முன்னிட்டு  இன்று (12-ஆம் தேதி) வெளியாகி இருக்கும்  மூன்று படங்களில் குலேபகாவலி படத்தின் நிலைமைதான் கவலைக்கிடம்.

பிரபுதேவாவின் நண்பரும், நயன்தாராவின் மானேஜருமான ராஜேஷ் தயாரித்த படம் இது.

பிரபுதேவாவும் நயன்தாராவும் காதலர்களாக இருந்தபோது, நயனுக்கு உதவி செய்வதற்காக பிரபுதேவா நியமித்த ஆள்தான் ராஜேஷ்.

பிரபுதேவா பிரிந்து சென்ற பிறகும் நயன்தாரா உடன் ஒட்டிக்கொண்டார் ராஜேஷ்.

நயன்தாராவை வைத்து அறம் படத்தை தயாரித்தவர், இப்போது பிரபுதேவாவை வைத்து குலேபகாவலி படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பிலும் நயன்தாராவின் முதலீடு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய இரண்டு படங்களும் அதிக தியேட்டர்களை ஆக்ரமித்துக்கொண்டதால் குலேபகாவலி படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

150க்கும் குறைவான தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆகியுள்ளது – குலேபகாவலி.

சில தினங்களுக்கு முன்னரே இப்படத்தின் ரிசர்வேஷன் தொடங்கிவிட்டது. ஆனால் 5 சதவிகித புக்கிங்கூட இல்லை. அதுமட்டுமல்ல, தமிழகம் முழுக்க குலேபகாவலி படத்துக்கு எங்கேயும் ஓப்பனிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு  கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில். 70 நாட்களுக்கும் மேல் நடைபெற்றுள்ளது.

பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகளை மட்டுமே 28 நாட்கள் படமாக்கியுள்ளனர்.

தற்போதைய தகவலின்படி ‘குலேபகாவலி’ படத்தினால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.