கௌதம் மேனன் படத்தில் லட்சுமி மேனன் – ராதா மோகன் இயக்குகிறார்

STEP0912

அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம்மேனன் இயக்க இருக்கிறார் அல்லவா?

இதற்கிடையில் ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருக்கிறார் கௌதம் மேனன்.

இந்தப் படத்திற்கான கதாநாயகி தேர்வு தற்போது நடைபெற்று வரும்நிலையில்.. லட்சுமிமேனனை கதாநாயகியாக்கலாமே என கௌதம் மேனன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளரே இப்படி கோடு போட்ட பிறகு ரோடு போடாமல் இருக்க முடியுமா? ஓகே..ஸார் குட் சாய்ஸ் என்று அவரது விருப்பத்தை ஆமோதித்திருக்கிறார் ராதா மோகன்.

அப்புறமென்ன?

கௌதம் மேனன் படத்தில் லட்சுமி மேனன்  நடிக்கிறார்.

படம் தொடங்க பல மாதங்கள் இருக்கின்றன. எனவே எத்தனையோ மாற்றங்கள் நடக்கலாம். ஆனால் கதாநாயகி விஷயத்தில்  மாற்றம் இருக்காது என்று நம்பலாம்.

ஏன் சொல்லுங்க?

அவர் தேர்வு செய்திருப்பது லட்சுமி ‘மேனன்‘ அல்லவா?