கௌதம் வாசுதேவ் மேனனின் புருடா புராஜக்ட்ஸ்….

gautham-menon2

சொந்த சரக்குடன் கௌதம் வாசுதேவ் மேனன் படம் எடுக்க கற்றுக் கொண்டாரோ இல்லையோ… செமத்தியாக பணம் பண்ணுவதை கற்றுக் கொண்டுவிட்டார்.

படம் எடுக்காமலே, படம் காட்டி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை கௌதம் வாசுதேவ் மேனனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தனுஷை வைத்து அவர் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’படமும், விக்ரமை வைத்து இயக்கி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படமும் கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்து மல்டிஸ்டார் படமான ‘ஒன்றாக’ என்றொரு படத்தை துவங்கவிருக்கிறார் என்று சில தினங்களுக்கு முன் ஒரு தகவல்வெளியானது.

இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அதன் பிறகு ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு ஏற்று நடித்த கார்த்திக் கேரக்டரில் மாதவனை நடிக்க வைத்து விடிவி-2 என்ற படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக ஒரு தகவல்.

ஒன்றாக படத்தின் பெயரைத்தான் விடிவி – 2 என்று மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் பியா பாஜ்பாய் டோவினோ தாமஸ் நடிக்க அபியும் அனுவும் என்ற படத்தையும் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 9 அன்று ரிலீஸ் ஆகிறது.

இது தவிர கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகத்தையும், கமல்ஹாசனை வைத்து இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தையும், அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதெல்லாம் உண்மையா?

அவர் எடுத்த படங்கள் எல்லாம் ஃபைனான்ஸ் பிரச்சனையால் முடங்கிக் கிடக்கின்றன.

அந்தப் படங்களை முடிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அதை புரட்டுவதற்காகவே இப்படி ஏகப்பட்ட புருடா புராஜக்ட்டுகளை அவர் அறிவிப்பதாக சொல்கிறார்கள் திரையுலகில்.