கேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற ‘எழுமின்’!

MV Jayarajan

‘வையம் மீடியாஸ்’ சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் “எழுமின்”.

இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ‘எழுமின்’ படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.சி. மொய்தீன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் எம்.வி.ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.