சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.

2057

சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 23

 

படம் எடுக்கப் பணம்தான் மூலதனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் அப்படித்தான்- பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் பல பேர் கையில் பத்து பைசா இல்லாமலேயே தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உண்மை ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது.

நான் சொல்லப் போகும் இந்த சம்பவத்துக்குப் பிறகே தெரிந்து கொண்டேன்.

கையில் பணம் இல்லாமல் படம் எடுக்க வருபவர்கள் நம்புவது என்னைப் போன்ற நடிகைகளைத்தான். அதாவது எங்களின் உடம்பை.

நாங்கள்தான் அவர்களுக்கு அட்சய பாத்திரம்.

எங்களைக் காட்டித்தான் கோடிக்கணக்கான பணத்தைப் புரட்டுகிறார்கள்.

வெளிப்பார்வைக்குத்தான் அவர்கள் கோடிகளில் புரளும் பெரிய புரட்யூஸர்கள்.

சொன்னால் வெட்கக்கேடு. வெத்துப்பேப்பர்கள் அவர்கள்.

உண்மையில் அவர்களில் பலர்  வெளியே தெரியாமல்  மாமா வேலையைத்தான் செய்கிறார்கள். .

இந்த விஷயம் தெரியாமல் பிரபலமான அந்த புரட்யூஸரிடம் போய் நானே வலிய மாட்டிக் கொண்டது என் வாழ்க்கையில் நான் சந்தித்த மற்றொரு துயரம்.

இன்றைய தேதிக்கு அவர் திரையுலகில் மிகப்பெரிய புரட்யூஸர்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் பல படங்கள் எடுத்திருக்கிறார். எல்லாமே மெகா ப்ராஜெக்ட்.

அவருடைய பழைய கதையைக் கேட்டதும், எங்கிருந்துதான் அவருக்கு இத்தனை கோடிகள் வந்ததோ என்று நானே மலைத்துப் போயிருக்கிறேன்.

ஆரம்ப காலங்களில் அவர் வேலை பார்த்த ஒரு தெலுங்கு நடிகையை ஏமாற்றிச் சேர்த்த பணம் என்று இண்டஸ்ட்ரியில் பேசிக் கொள்வார்கள்.

இல்லை. அந்த நடிகையின் பினாமி என்று சொல்லுவார்கள் சிலர்.

அதுதான் உண்மையோ என்றுகூட நான் நினைத்ததுண்டு.

நெருங்கிப் பார்த்ததும்தான் அவருக்கு ஏது இத்தனை பணம் என்று தெரிந்தது எனக்கு.

அவரது வெற்றி ரகசியமும் புரிந்தது.

என்ன ரகசியம்?

என்னைப் போன்றவர்களைத் தொழில் அதிபர்களுக்கும், ஃபைனான்ஸியர்களுக்கும் சத்தமில்லாமல் சப்ளை செய்கிறார்.

நடிகைகளை ருசித்த   தொழில் அதிபர்களும், ஃபைனான்ஸியர்களும்  அவர் கேட்ட பணத்தை இல்லை என்று சொல்லாமல்   கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

மற்ற தொழில் செய்பவர்களுக்கு பணம் கடன் கொடுத்தால் வட்டி மட்டுமே கிடைக்கும்.

சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக. அதனாலேயே பல பண முதலைகள் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை இங்கே வந்து கொட்டுகிறார்கள்.

கொடுத்த பணம் திரும்பி வருகிறதோ இல்லையோ… வட்டியை கொடுத்துவிடுவார்கள். அவ்வப்போது குட்டிகளையும் ஏற்பாடு செய்து குஷிப்படுத்துவார்கள்.

எனக்கு தெரிந்து கோடம்பாக்கத்தில் உள்ள பல தயாரிப்பாளர்கள் சர்வசாதாரணமாக 100 கோடி எல்லாம் கடன் வாங்குகிறார்கள்.

நான் சொல்லும் அந்த புரட்யூசரும் அப்படித்தான்.

சாய்பாபாவின் பக்தராக தன்னைக் காட்டிக் கொள்வார்.  ஆனால் செய்வதெல்லாம் மாமா வேலை.

கடன் வாங்கிய பணத்தை வாரி இறைத்து  முன்னணி ஹீரோக்களை வைத்து பெரிய பெரிய பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளுகிறார்  இவர்.

இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கும் நம்பர் ஓன் ஹீரோவை வைத்து அந்த புரட்யூஸர் படம் பண்ணப் போகிறார் என்று கேள்விப்பட்டேன்.

அந்தப் படம் எனக்குக் கிடைத்தால் என் கேரியருக்குப் பேருதவியாக இருக்கும்.

என் போட்டியாளர்களான சில நடிகைகள் அந்த சான்ஸை வாங்கிவிட முயற்சி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

நானும் ட்ரை பண்ணலாமே என்று அவரை சந்தித்து எனக்கு சான்ஸ் தரும்படி வாய்ப்புக் கேட்டேன்.

மூன்று மொழிப் படம் என்பதால்  ஐஸ்வர்யா ராய் ரேன்ஜுக்கு  பாலிவுட்டில்  டாப் ஹீரோயினை  போடப் போவதாக அவர் சொன்னதும் எனக்கு ஏமாற்றம்.

அதே சமயம், சரி என்று சொல்லிவிட்டு பிறகு ஏமாற்றாமல் தன் நிலையை வெளிப்படையாகச் சொன்னாரே என்று ஒரு பக்கம் அவரை பாராட்டினேன்.

அதோடு அதை மறந்தே போனேன்.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

திடீரென ஒரு நாள் அவரிடமிருந்து போன்.

நான் எதிர்பார்க்கவே இல்லை.

அந்தப் படத்தின் ஹீரோயின் சான்ஸை எனக்கே தருவதாக சொன்னார்.

ஆபீஸுக்கு கூப்பிட்டு எனக்கு அட்வான்ஸ் கொடுக்கும் வரை என்னால் நம்பவே முடியவில்லை.

மெகா ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது.

இதை வைத்து நான்கைந்து படங்கள் கிடைக்கும்.

படம் வெளிவந்தால் நிச்சயம் ஹிட்டாகும்.

பப்ளிசிட்டி செய்து எப்படியாவது படத்தை ஓட்டிவிடுவார்.

அதைக் கொண்டு இன்னும் சில படங்கள் கிடைக்கும் என்றெல்லாம் கனவில் திளைத்துக் கொண்டிருந்தேன்.

ஹைதராபாத்தில் ஷூட்டிங் ஆரம்பமானது.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் பெரும்பாலான காட்சிகள் எடுத்தார்கள்.

முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பமானபோது அங்கே அந்த தயாரிப்பாளரும் வந்திருந்தார்.

சும்மா சொல்லக் கூடாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.

ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர்போல் ஒரு ஓரமாக நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்.

புரட்யூஸர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரைப் பற்றி உயர்வாக நினைத்தேன்.

அப்படி நினைத்து தப்பு என்று அன்றிரவே எனக்கு புரிந்தது.

அதிர்ச்சியில் உறைந்துபோனேன்…

அடப்பாவி…

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்