எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?

1921

எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 21

 

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும். ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த என்னை வரவேற்றது அழகர்சாமியின் குரல்.

“வாம்மா நிலா, இப்பத்தான் ஷூட்டிங் முடிஞ்சுதா?”

“ம்” என்று வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டு ரூமுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டேன்.

இவன் எதற்கு வீட்டுக்கு வந்தான்?

கொஞ்ச நாளாய் இவன் தொல்லை இல்லாமல் இருந்தது.

இப்போது மறுபடி வந்திருக்கிறான். எத்தனை கஷ்டமர்களை புக் பண்ணிவிட்டு வந்திருக்கிறானோ?

இன்றைக்கு என் உடம்பு நாறப் போகிறது.

எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?

வந்ததும் வராததுமாக அம்மாவிடம் பணக்கட்டைக் காட்டியிருப்பான்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் கரன்ஸிக் கட்டை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு பீரோவில் பூட்டியிருப்பாள்.

அடுத்து என்ன?

ஏதாவது ஹோட்டல் பேரைச் சொல்லி, அங்கே போய் படுத்துவிட்டு வா என்று சொல்லப் போகிறாள்.

இந்த ஈனப்பிழைப்பு பிழைப்பதற்கு பதில் ஒரேயடியாய் செத்துத் தொலைக்கலாம்.

“நிலா… உள்ளே என்ன பண்ணிக்கிட்டிருக்கே?”

“இதோ வர்றேம்மா.”

வெளியே வந்ததும் கவனித்தேன். அழகர்சாமி அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தான்.

“என்னம்மா நிலா போன வாரம் கல்யாணத்துல நம்ம ஏரியா ஏ.ஸி.யை மீட் பண்ணினியாமே? காலையில பார்த்தப்ப சொன்னார்.”

கருப்புக் கண்ணாடியை கழற்றித் துடைத்தபடி கேட்டான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் நான் அம்மாவைப் பார்த்தேன்.

“அந்த ஏ.ஸி.க்கு எல்லாம் தெரியுமாம். அதான் அழகர்சாமியைக் கூப்பிட்டு அனுப்பினாராம். அவரை மாதிரி பெரிய அதிகாரிங்களோட தயவும் நமக்கு வேணும்தானே?”

அம்மா சொல்ல, நான் அமைதியாக இருந்தேன்.

“ஆமாம்மா… அவங்க நம்ம கையில இருந்தாத்தானே நாம பொழைக்க முடியும்?

அதுவுமில்லாம அந்த ஏ.ஸி. இருக்காரே… ரொம்ப நல்ல மாதிரி.

நமக்கு ஒரு பிரச்சினைன்னா மொத ஆளா வந்து நிப்பாரு.

அந்த பெங்களூர் நடிகை இருக்கே…

அந்தப் பொண்ணு நம்ம ஏ.ஸி.க்கு ரொம்ப க்ளோஸ்.

அவர் கூப்பிட்டப்ப எல்லாம் போவும். அதனால அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சினையா இருந்தாலும் உடனே ஹெல்ப் பண்ணுவாரு.

இன்னைக்கு மெட்ராஸ் சிட்டியில ஜாம் ஜாம்னு தொழில் பண்ணுது அந்தப் பொண்ணுதான்.

போலீஸ்காரன் எவனாவது அவகிட்ட போக முடியுதா பாரு?

நம்ம ஏ.ஸி.யோட ஆளுன்னு டிபார்ட்மெண்டுக்கே தெரியும்.

நாமளும் தொழில் பண்றோம். நமக்கும் அவரோட ஹெல்ப் தேவைப்படும்.”

அழகர்சாமியின் பேச்சு சகலத்தையும் எனக்கு புரிய வைத்தது.

அவன் மூலம்தான் ஹோட்டர்களில் விலைமகளாய் நான் வலம் வருகிறேன் என்பதை அந்த ஏ.ஸி. மோப்பம் பிடித்திருப்பான்.

அவனைக் கூப்பிட்டு மிரட்டி, ‘ஒரு நாளைக்குப் படுக்க அனுப்பு’ என்று கேட்டிருப்பான்.

இவனும் பல்லிளித்த சரி என்று சொல்லிவிட்டு வந்து இங்கே அந்த ஆளைப் பற்றிப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறான்.

என்னிடம் இப்படிச் சொன்னவன் அம்மாவிடம் என்னவெல்லாம் சொல்லி பயமுறுத்தி வைத்தானோ?

அதுவும் போலீஸ் அதிகாரிக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதுமே அம்மா நடுங்கிப் போயிருப்பாள்.

அவரால் நமக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்திருப்பாள்.

அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

இன்றிரவு அந்த போலீஸ் அதிகாரியின் காமப்பசிக்கு இரையாக வேண்டும் என்று என் தலையில் எழுதியிருக்கிறது. அதை மீறி என்னால் என்ன செய்துவிட முடியும்?

என் யூகத்துக்குச் சற்றும் மாறாமல் நான் நினைத்ததைத்தான் அம்மா சொன்னாள். அவள் பேச்சை தட்ட முடியாமல் அழகர்சாமியுடன் கிளம்பிப் போனேன்.

ஷூட்டிங் போவதுபோல் ஏகப்பட்ட அலங்காரத்துடன் போன நான் மறுநாள் காலை திரும்பி வந்தபோது கசங்கிப் போயிருந்தேன்.

காக்கிச்சட்டை போட்ட ஒரு மிருகத்திடம் மாட்டிக் கொண்ட அனுபவம் இப்படி என்றால் கஷ்டம்ஸ் அதிகாரி என்ற பெயரில் அலையும் ஒரு காமுகனிடம் நான் பட்ட வேதனை இருக்கிறதே….

சதை வெறி பிடித்து அலையும் காமக் கொடூரன்கள் அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

அதற்கு கஸ்டம்ஸ் துறையும் விதி விலக்கில்லை என்று தெரிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

வொயிட் அண்ட் வொயிட்டில் இருக்கும் அவர்களின் தோற்றம்தான் தூய்மையே தவிர, மனசில் அழுக்கு மூட்டையைச் சுமப்பவர்கள்.

அருவறுப்பானவர்கள்.

அசிங்கப் பிராணிகள்.

சூழ்ச்சி வலையை விரித்து வைத்துக் கொண்டு ஏர்போர்ட்டில் காத்திருக்கிறார்கள் இந்தக் காமுகர்கள்.

இவர்களின் சதித் திட்டம் தெரியாமல் என்னைப் போன்றவர்கள் அதில் விழுந்து தொலைத்துவிடுகிறார்கள்.

சென்னை ஏர்ப்போட்டில் இன்றைக்கும் நடக்கிறது இந்தக் கொடுமை.

கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் சில கழுகுகள் அங்கே வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஷூட்டிங்குக்கு, ஸ்டார் நைட்டுக்கு என்று வெளி நாட்டுக்குச் சென்று திரும்பும் என் போன்ற நடிகைகள்தான் அந்த கழுகுகளின் இலக்கு, இரை.

உதவி செய்கிற பெயரில் நெருங்கி, கடைசியில் உயிரையே எடுப்பவர்கள் இவர்கள்.

கருணை முகத்துடன் கைகுலுக்கி காமத்தைத் தீர்த்துக் கொள்பவர்கள்.

மாட்டேன் என்று மறுத்தால் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த பொருட்களுக்கு லட்சக்கணக்கில் டூட்டியை போட்டுத் தீட்டி விடுவார்கள்.

அல்லது வெளிநாட்டு பொருட்களைக் கடத்தி வந்ததாக கதைகட்டி அசிங்கப்படுத்தி விடுவார்கள். இதிலிருந்து மீள பணத்தைக் கொட்டி அழ வேண்டும்.

பணமா? மானமா?

நடிகைகள் பணத்துக்காக மானத்தை இழக்கத் தயங்காதவர்கள் என்ற சைகாலஜியை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கூப்பிடுவது அவர்களுக்குச் சுலபம்.

அவர்களால் கிடைக்கும் அனுகூலத்துக்காக அந்தக் கழுகுகளுக்கு இரையான நடிகைகள் பலர். ஒரு தடவை இவர்களிடம் படுக்க சம்மதித்துவிட்டால் போதும், அப்புறம் ஏர்போர்ட்டில் ராஜமரியாதைதான். ஏ.கே.47 துப்பாக்கி வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.

பல நடிகைகள் அடிக்கடி வெளிநாடு சென்று பெட்டி பெட்டியாய் பொருட்களை வாங்கி வருவதன் பின்னணி இதுதான்.

எனக்குத் தெரிந்த நடிகை ஒருத்தி ஒவ்வொரு தடவையும் ஒரு கிலோ தங்கமாவது வாங்கி வருகிறாள்.

கஸ்டம்ஸ்காரன்கள் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறான்.

எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த வெள்ளாடை போட்ட வேட்டை நாய்களிடம் மாட்டிக் கொண்டவர்களில் நானும் ஒருத்தி என்பதைச் சொல்லணுமா என்ன?

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்