அல்லு அர்ஜுன் படம் அள்ளியது வசூல்…!

en peyar suriya Stills 007

அல்லு அர்ஜுன், அனு இமானுவேல் நடித்த  ‘நாபேரு  சூர்யா  நாஇல்லு  இந்தியா’  தெலுங்குப் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பட்டையைக்கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அந்தப் படத்தை என் பெயர் சூர்யா- என் வீடு இந்தியா என்ற பெயரில் தமிழில் டப் செய்து கடந்த வாரம் வெளியிட்டனர்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் இந்தப் படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்திருக்கிறார்.

‘நாபேரு  சூர்யா  நாஇல்லு  இந்தியா’   தெலுங்குப் பதிப்பு சுமார் 50 தியேட்டர்களிலும், அதன் தமிழ்பதிப்பான என் பெயர் சூர்யா- என் வீடு இந்தியா  தமிழ்ப்பதிப்பு 150 தியட்டர்களிலும் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை வெளியான அல்லு அர்ஜூன் படங்களின் வசூலைவிட பல மடங்கு வசூலை இந்தப்படம் அள்ளியிருக்கிறது.

அதாவது, படம் வெளியான முதல் 3 நாட்களில் தமிழகம் முழுக்க  2 கோடி வசூலை அறுவடை செய்திருக்கிறது.

1 வாரத்தில் இந்தப்படம் 4 கோடி ரூபாயை உறுதியாக வசூலிக்கும் என்கின்றனர் டிரேடிங் வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

4 கோடி வசூல் என்றால் என்றால் படத்தை வெளியிட்ட விநியோகஷ்தருக்கு நிச்சயமாக 2 கோடி ஷேர் கிடைக்கும்.

ஒருவேளை 15 பர்சென்ட் டிஸ்ட்ரிபியூஷன் கமிஷன் என்ற அடிப்படையில் படத்தை வெளியிட்டிருந்தால் கமிஷனாகவே 30 லட்சம் கிடைக்கும்.