இம்மாதம் வெளியாகிறது… எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

Echarikkai

தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி.

அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா 2 போன்ற படங்களை வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது ‘எச்சரிக்கை’ இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தை வெளியிடுகிறார்..

டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

எடிட்டிங் – கார்த்திக் ஜோகேஷ்

ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ்

இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்..

பாடல்கள் – கபிலன்

கலை – விஜய் ஆதி நாதன்

நடனம் – விஜய்சதீஷ், சஅனுஷாசஸ்வாமி

ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்

தயாரிப்பு – சி.பி.கணேஷ் ,சுந்தர் அண்ணாமலை

எழுதி இயக்கி இருப்பவர் – சர்ஜுன்

இவர் யூ டியூப்பில் பிரபலமான மா.லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கியவர்-

அத்துடன் மணிரத்னம் ஏஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தின் சிறப்பையும் மா லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின்தயாரிப்பாளர் ராஜேஷ் நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் படத்தை பற்றி…

இது கிரைம் திரில்லர் படம்… எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்…

சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார்.

கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்.

பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்றார்.